MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் டிவியில் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் டாப் 5 சீரியல்கள் என்னென்ன தெரியுமா?

விஜய் டிவியில் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் டாப் 5 சீரியல்கள் என்னென்ன தெரியுமா?

விஜய் டிவி தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், ஒரு சில தொடர்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில்.. டாப் 5 லிஸ்டில் இடம்பிடித்துள்ள சீரியல்கள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jul 20 2023, 07:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பாக்கிய லட்சுமி:

இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று 'பாக்கிய லட்சுமி'. கணவர், குடும்பம், குழந்தைகள் தான் வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருக்கும் சராசரி பெண் ஒருவரை, அவரின் கணவர் பல முறை அசிங்கப்படுத்திய போதும், தாங்கி கொண்ட நிலையில்... கணவர் தனக்கு துரோகம் செய்து விட்டு இன்னொரு பெண்ணுடன் பழகுவது தெரிந்த பின்னர், கணவருக்கு எதிராக வளர்ந்து காட்ட வேண்டும் என நினைக்கும் பாக்கிய லட்சுமி என்கிற கதாபாத்திரை சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான கதை களம் தான் இந்த சீரியல். ஓவ்வொரு வாரமும் டாப் 10 லிஸ்டில் இந்த சீரியல் இடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

25

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

அண்ணன் - தம்பிகளின் பாசத்தை அடிப்படையாக வைத்து துவங்கப்பட்ட இந்த சீரியல் வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. சூழ்நிலை காரணமாக அண்ணன் - தம்பிகள் பிரிந்தாலும், ஒவ்வொரு முறையும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் இருந்து வருகிறார்கள். பல்வேறு ட்விஸ்டுகளுடன்ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தான், பாக்கிய லட்சுமி தொடரை அடுத்து, அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. 

தொகுப்பாளினி டிடியின் விவாகரத்துக்கு காரணம் பாடி டிமாண்ட்! அது ஒரு நோய்.. பகீர் கிளப்பும் பயில்வான்!

35

தமிழும் சரஸ்வதியும்:

அம்மா - மகன் இடையே பாசத்திற்கும், நேர்மைக்கும் நடக்கும் போராட்டமாக தற்போது இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தங்கையின் கணவர் சூழ்ச்சியால் குடும்பத்தை விட்டு, பிரிந்து செல்லும் தமிழ், சரஸ்வதியின் துணையோடு மீண்டும் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிகப்படியான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

45

சிறகடிக்க ஆசை:

சமீபத்தில் துவங்கப்பட்ட இந்த சீரியல், குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாயகனை திருமணம் செய்து கொள்ளும் ஏழை குடும்பத்தை சேர்ந்த நாயகி, எப்படி கணவரை மாற்றி பொறுப்பானவராக மாற்றுகிறார் என்பதை நேர்த்தியான கட்சிகளுடன் இயக்கி வருகிறார் இயக்குனர். மிக குறுகிய நாட்களிலேயே இந்த சீரியல் TRP-யில் டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அட பாவிங்களா நல்லா இருப்பீங்களா? கார்த்தியின் மகன் ப்ரீகேஜி செலவை கூறி.. பள்ளியை திட்டி தீர்த்த சிவகுமார்!
 

55

தென்றல் வந்து என்னை தொடும்:

டாப் 10 டிஆர் பி பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வந்த இந்த சீரியல் தற்போது கொஞ்சம் டல் அடிக்க துவங்கி விட்டாலும், தொடர்ந்து இந்த சீரியலுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் தற்போது வெற்றி, தன்னுடைய  மகள் சுடரை கண்டுபிடித்து விட்டாலும், அவரை சுற்றி பல்வேறு சூழ்ச்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்க அதனை முறியடித்து விட்டு மனைவியுடன் சேர்வாரா? இல்லையா என்பதை நோக்கி தான் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Recommended image2
கர்ப்பமாகி 2 வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை பிறக்கல... சன் டிவி சீரியல் பரிதாபங்கள்
Recommended image3
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved