MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vijay Sethupathi : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய 2 ரியாலிட்டி ஷோக்களின் கதை என்ன ஆச்சு தெரியுமா?

Vijay Sethupathi : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய 2 ரியாலிட்டி ஷோக்களின் கதை என்ன ஆச்சு தெரியுமா?

விஜய் சேதுபதி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஐ தொகுத்து வழங்குவதற்கு முன்பு 2 ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கிய அனுபவம் கொண்டவர். அவர் முதன்முதலில் 'நம்ம ஊரு ஹீரோ' என்ற டாக் ஷோவை தொகுத்து வழங்கினார், அதை தொடர்ந்து 'மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

3 Min read
Rsiva kumar
Published : Oct 06 2024, 01:18 PM IST| Updated : Oct 06 2024, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Bigg Boss Tamil Season 8 Host by Vijay Sethupathi

Bigg Boss Tamil Season 8 Host by Vijay Sethupathi

விஜய் சேதுபதி இன்று தொடங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 என்ற ரியாலிட்டி ஷோவிற்கு முன்னதாக 2 ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியிருக்கிறார். இதைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அந்த 2 ரியாலிட்டி ஷோவும் பெரிதாக பேசப்படவில்லை. அதனால், அந்த ரியாலிட்டி ஷோ ஒரே சீசனோடு முடிவுக்கு வந்தது. அப்படி எந்த ரியாலிட்டி ஷோவை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது.

26
Vijay Sethupathi

Vijay Sethupathi

அதுதான் நம்ம ஊரு ஹீரோ மற்றொன்று மாஸ்டர் செஃப் இந்தியா – தமிழ். இந்த 2 ரியாலிட்டி ஷோவும் சன் டிவியில் தான் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியானது 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 16 எபிசோடுகளை கடந்தது. இது முழுக்க முழுக்க அரட்டை அரங்கம் மாதிரி தான். அதாவது டாக் ஷோ. யாரையாவது சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து அவர்களிடம் பேச வேண்டும்.

இந்த டாக் ஷோ நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், திருநங்கைகள், இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்பவர்கள் என்று ஒவ்வொருவரையும் சிறப்பு விருந்தினராக அழைத்து அவர்களது சேவைகளை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவது போன்ற ஒரு ஷோ தான். 2019 ஆம் ஆண்டு ஜனவரி 20 முதல் 2019 மே 12 வரையில் இந்த ஷோ நடைபெற்றது. அதன் பிறகு அந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை சன் டிவி ஒளிபரப்பு செய்யவில்லை. இது விஜய் சேதுபதியின் முதல் ரியாலிட்டி ஷோ.

36
Bigg Boss Tamil Season 8

Bigg Boss Tamil Season 8

அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு மீண்டும் 2ஆவது முறையாக சன் டிவியுடன் விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப் தமிழ் என்ற ரியாலிட்டி ஷோவிற்காக இணைந்தார். முழுக்க முழுக்க சமையல் நிகழ்ச்சியை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியானது 30 எபிசோடுகள் வரை சென்றது. அதன் பிறகு இந்த நிகழ்ச்சிக்கும் சன் டிவி முழுக்கு போட்டது.

தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு டாப் குக்கு டூப் குக்கு என்ற சமையல் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தது. இதில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்டது. வெற்றிகரமாக முதல் சீசனை முடித்த கையோடு 2ஆவது சீசனுக்கு ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் இந்த 2 ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு 3ஆவது முறையாக புத்தம் புதிய ரியாலிட்டி ஷோவில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். ஆனால், இதில் அவரது பங்களிப்பு எப்படி இருக்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியானது எந்தளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

46
Vijay Sethupathi Bigg Boss Tamil Season 8

Vijay Sethupathi Bigg Boss Tamil Season 8

எப்படி கமல் ஹாசன் தனது அரசியல் ஆதாயத்திற்காக பிக்பாஸ் மேடையை பயன்படுத்தினாரோ அதே போன்று விஜய் சேதுபதி தனது நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் படங்களுக்கு இந்த மேடையை பயன்படுத்தி கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விஜய் சேதுபதியை போன்று எளிமையான, நல்ல மனிதரை பார்க்கவே முடியாது.

ரசிகர்களிடம் உரிமையோடு பழகக் கூடியவர். கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தக் கூடியவர். இப்படியெல்லாம் ரசிகர்களின் மனதில் திகழும் விஜய் சேதுபதி முதல் முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்கலாம்.

எப்படி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார், சக நடிகர், நடிகைகளிடம் எப்படி பேசுகிறார், பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் பங்களிப்பு எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் பார்க்க ஆர்வமாகவே இருக்கிறது.

56
Bigg Boss Tamil Season 8

Bigg Boss Tamil Season 8

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு விஜய் சேதுபதிக்கு ரூ.60 கோடி வரையில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், கமல் ஹாசனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ரூ.130 கோடி வரையில் கொடுத்திருக்கிறது என்று தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிகழ்ச்சி மட்டுமின்றி இனி வரும் அடுத்தடுத்த பிக் பாஸ் சீசன்களையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினால் அவரது சம்பளம் மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

66
Vijay Sethupathi Reality Show

Vijay Sethupathi Reality Show

தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை பார்ட் 2, காந்தி டாக்கீஸ், ஏஸ், டிரைன், பிசாசு 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகிறது. இனிவரும் படங்கள் இந்த 100 நாட்களுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக முதல் போட்டியாளராக நடிகர் ரஞ்சித் எண்ட்ரி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதே போன்று அடுத்தடுத்த போட்டியாளர்களாக ஐஸ்வர்யா, சீரியல் நடிகர் தீபக், தர்ஷா குப்தா, சஞ்சனா நமிதாஸ், குக் வித் கோமாளி சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, தர்ஷிகா, சத்யா, கானா ஜெஃப்ரி, பவித்ரா ஜனனி, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண் பிரசாத் ஆகியோர் பிக் பாஸ் வீட்டின் போட்டியாளராக வருகிறார்கள். இவர்களில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் சேதுபதி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved