MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'நந்தா' படத்தில் சூர்யாவுக்கு முன் ஹீரோவாக நடிக்க இருந்தது டாப் ஹீரோ யார் தெரியுமா?

'நந்தா' படத்தில் சூர்யாவுக்கு முன் ஹீரோவாக நடிக்க இருந்தது டாப் ஹீரோ யார் தெரியுமா?

பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான 'நந்தா' திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் குறித்து, இந்த பதிவில் பார்ப்போம். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jan 07 2025, 01:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Director Bala First Movie is Seathu

Director Bala First Movie is Seathu

தமிழ் சினிமாவில், தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் இயக்குனர் பாலா. நடிகர் விக்ரமை வைத்து 1999 ஆம் ஆண்டு, 'சேது' படத்தை இயக்கிய பாலா, இதைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் தான் 'நந்தா'. சூர்யா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், லைலா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ராஜ்கிரண், சரவணன், ராஜஸ்ரீ, கருணாஸ், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
 

26
Suriya and Bala Movie

Suriya and Bala Movie

சிறுவயதிலேயே தன்னுடைய தாயை கொடுமைப்படுத்தும் தந்தையை கொலை செய்து விட்டு நந்தா (சூர்யா)  சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்ல நேர்கிறது. பின்னர் தண்டனை கால முடிந்து, சிறையில் இருந்து வெளியே வரும் நந்தா தனது தாயையும் - தங்கையையும் பார்ப்பதற்காக வீட்டிற்கு செல்கிறார். ஆனால் தன்னுடைய மகன் ஒரு கொலைகாரன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத தாய், அதை தாங்கிக்கொள்ள முடியாமல், தன்னுடைய மகனிடம் பேசாமல் தவிர்க்கிறார்.

திருமணம் முடிந்த கையேடு கணவருடன் சாக்ஷி அகர்வால் நடத்திய ரொமான்டிக் போட்டோ ஷூட்!
 

36
Tamil cinema latest news

Tamil cinema latest news

தன்னுடைய படிப்பை தொடர நினைக்கும் நந்தாவுக்கு, அந்த ஊரில் பெரிய மனிதராக இருக்கும் ராஜ்கிரண் படிக்க வைக்க முன் வருகிறார். அகதியாக வரும் லைலா மீது சூர்யாவுக்கு காதல் மலர்கிறது. பின்னர் நந்தா வழி மாற காரணம் என்ன? அவர் ஏன் அடிதடியில் இறங்குகிறார்? ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸுடன் இந்த படத்தை இயக்குனர் பாலா விறுவிறுப்பாக இயக்கி இருந்தார்.

46
Director Bala Upcoming movie Vanangaan

Director Bala Upcoming movie Vanangaan

நடிகர் சூர்யாவுக்கு திரையுலக வாழ்க்கையில், மிகப்பெரிய திருப்புமுனையை இந்த படம் தான் ஏற்படுத்தி கொடுத்தது என்பதை அவரே... சமீபத்தில் பாலாவின் 'வணங்கான்' பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது கூறினார். அதே போல் காக்க காக்க, கஜினி போன்ற திரைப்பட வாய்ப்புகள் இந்த படத்தை பார்த்து விட்டு தான் இயக்குனர்கள் தனக்கு தந்ததாகவும் சூர்யா கூறிய நிலையில், பாலாவுக்கு தன்னுடைய நன்றிகளையும் தெரிவித்தார்.

பாலாவால் வந்த வினை; தீய பழக்கங்கள் - விஷால் நிலைமைக்கு காரணம் இதுதான்? பகீர் கிளப்பிய பிரபலம்!
 

56
Ajith First Choice in Nandha

Ajith First Choice in Nandha

சூர்யா திரையுலக வாழ்க்கையில் தவிர்க்க முடியாத படமாக மாறிய இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சூர்யா இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் தல அஜித் தான். அவரை வைத்து பட பூஜைகள் போடப்பட்டு, அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து போஸ்டர்களும் செய்தித்தாள்களில் வெளியான. பின்னர் இப்படத்தில் இருந்து அஜித் விலகும் சூழலுக்கு தள்ளப்பட்டார். இந்த படத்தில் இருந்து அவர் விலகியவுடன் தான் 'நந்தா' பட வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்துள்ளது.
 

66
Director Bala and Ajith Planned Movie

Director Bala and Ajith Planned Movie

இந்த படத்திற்கு பின்னர் அஜித்தை வைத்து 'நான் கடவுள்' திரைப்படத்தை திட்டமிட்டார் பாலா. அப்போது அஜித்துக்கும் - பாலாவுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு இந்த படத்தில் இருந்தும் அஜித் விலக காரணமாக அமைந்தது. இதன் பின்னரே,  ஆர்யாவை வைத்து இந்த படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பெற்றபின் கும்முனு மாறிய அமலா பால்! மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
இயக்குநர் பாலா
அஜித் குமார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved