பற்றி எரியும் இரட்டை குழந்தை விவகாரம்..? மௌனம் களைத்த விக்னேஷ் சிவன் சூசகமாக பதிவிட்ட பளீச் பதில்!
நயன்தாரா- விக்னேஷ் சிவனின் இரட்டைக் குழந்தைகள் விவகாரம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கு விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சூசகமாக விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்றுள்ளவர் நடிகை நயன்தாரா. தற்போது வரை முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும், கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'நானும் ரவுடிதான்' என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த போது, நயன் - விக்கி இடையே காதல் தீ பற்றி கொண்டது. ஏற்கனவே சில காதல் விவகாரங்களில் சிக்கிய நயன்தாரா... விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வாரா? என கேள்வி எழுந்த நிலையில், வெற்றிகரமாக 7 ஆண்டுகள் காதலித்து, கடந்த ஜூன் 9 ஆம் இருவரும் திருமண பந்தத்திலும் இணைந்தனர்.
இவர்களின் திருமணம் மகாபலிபுரம் அருகே அமைந்துள்ள, பிரபல நட்சத்திர ஹோட்டலில் தடபுடலாக நடந்தது. பெற்றோர் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்தில், திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர் - நடிகைகள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.
மேலும் செய்திகள்: bigg boss tamil 6 : எலிமினேஷன்னா என்னது ? டீமை கதறவிடும் ஜிபி முத்து...
இவர்களுடைய திருமணம், ஒளிபரப்பும் உரிமை ஓடிடி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதன் காரணமாக, இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்ட முன்னணி நடிகர்- நடிகைகளுக்கு செல்போன், வீடியோ கேமரா, போன்றவற்றை எடுத்து வர அனுமதி மறுக்கப்பட்டது.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள போவதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் திருமணமான ஆன 4 மாதங்களில், நடிகை நயன்தாராவும்... விக்னேஷ் சிவனும்... கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, தாங்கள் இருவரும் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டோம் என கூறி குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
மேலும் செய்திகள்: raja rani 2 : மாமியாருக்காக அதிரடியில் இறங்கும் சந்தியா...இப்படி டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுத்தா எப்படி?
நயன் - விக்கி இருவரும் வாடகை தாய் மூலம், குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தற்போது திரையுலகினர் மத்தியிலும் சமூக வலைதளத்திலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதற்க்கு முக்கிய காரணம், இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை தடை செய்ய பட்டுள்ளது. இதை மீறி பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அரசின் சில கட்டுப்பாடுகளை அவர்கள் செயல்படுத்தி இருக்க வேண்டும். அதாவது திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்கு பின்பு தான் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி உண்டு. அதே போல் கணவன் - மனைவி இருவரில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் மட்டுமே இந்த முறை அனுமதி வழங்கப்படும். ஆனால் திருமணத்திற்கு முன்பே, இவர்கள் குழந்தைக்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்டனர் என்பதே உண்மை.
எனவே பலர் இவர்களின் இந்த முடிவு குறித்து, சமூக வலைதளத்தின் பல்வேறு விவாதங்களை செய்து வருகின்றனர். இப்படி தீயாக பற்றி எரியும் வாடகை தாய் குழந்தை விவகாரம் குறித்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூசகமாக பதில் அளித்துள்ளார் விக்னேஷ் சிவன். இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, "உங்கள் மீது அக்கறை கொள்பவரிடம் கவனம் செலுத்துங்கள். அவர்கள்தான் எப்போதும் உங்களுடனே இருப்பார். யார் உங்களிடம் சிறப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அவர்கள்தான் உங்களுக்கானவர். அதுதான் உண்மையும் கூட" என கேப்ஷன் போட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில் "உங்களுக்கானது உங்களுக்கு சேர வேண்டியது சரியான நேரத்தில் உங்களை வந்து சேரும், அதுவரை பொறுமையாய் இருங்கள் என கூறியுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது திரையுலகினர் மத்தியிலும், சமூக வலைதளத்திலும், விவாதத்திற்கு ஆளாகியுள்ள வாடகைக்கு தாய் விவகாரத்திற்கு விளக்கம் அளிக்கும் விதமாகவே பதிவிட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றன."