- Home
- Cinema
- கிரிக்கெட் வீரர் ரோஹித்தை கரம் பிடித்தார் இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா..புதுமண தம்பதியின் க்யூட் போட்டோஸ்
கிரிக்கெட் வீரர் ரோஹித்தை கரம் பிடித்தார் இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா..புதுமண தம்பதியின் க்யூட் போட்டோஸ்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் காலை 11.15 மணிக்கு இயக்குநர் ஷங்கரின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் கிரிக்கெட் வீரர் ரோஹித்திற்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயருக்கு சொந்தக்காரராக வலம் வருபவர் ஷங்கர். இவருடைய மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு, புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான 29 வயதான ரோகித்திற்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

தொழிலதிபர் தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் காலை 11.15 மணிக்கு இயக்குநர் ஷங்கரின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் கிரிக்கெட் வீரர் ரோஹித்திற்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக 2.0 படத்தின் கலை இயக்குனரான முத்துராஜ் பிரம்மாண்டமாக மேடை செட்டப் அமைத்துள்ளார்.

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மணமகன், மணமகளின் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் , நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமானஉதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

இளம் தம்பதியினரின் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வாழ்த்துக்களை குவித்து வருகிறது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் மேலும் குறைந்த பிறகு பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.