அடிப்படை அறிவில்லாமல் படமெடுத்து பிளாக்பஸ்டர் கொடுத்த இயக்குநர் ராஜமௌலி!
Director Rajamouli Make Hit Movies: ராஜமௌலி தனக்கு அடிப்படை அறிவே இல்லாத ஒரு துறையில் படம் எடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். அந்தப் படத்திற்குப் பின்னால் இருந்த பதற்றம், சிரமங்களை அவர் விவரித்தார். அந்த படம் எது என்று பார்க்கலாம்.

இயக்குனர் ராஜமௌலி
இயக்குனர் ராஜமௌலி தோல்வியே இல்லாமல் ஹிட் கொடுத்த இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்து வருகிறார். சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளார். அவரது RRR படத்திற்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. மகதீரா, ஈ, பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய படங்களை அதிக ரிஸ்க் எடுத்து இயக்கினார்.
நிவேதா பெத்துராஜின் பதிவிற்கு குவியும் Comments: இப்போ சென்னைக்கு இது தான் தேவை!
விஷுவல் எஃபெக்ட்ஸ்
‘ஈ’ படம் எடுக்கும்போது அனிமேஷன், கிராபிக்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ் பற்றி ராஜமௌலி சிறிதளவு கூட அறிவு இல்லை. இதை அவரே ஒரு பேட்டியில் கூறினார். ‘ஈ’ படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பொறுப்பை மகுடா (Makuta VFX) என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தோம்.
டயட்டா அப்படின்னா: ஒரே நேரத்தில் 100 மிளகாய் பஜ்ஜி, 20 இட்லி சாப்பிட்ட நடிகர் யார் தெரியுமா?
ஈ எப்படி இருக்கும்
ப்ரீ-புரொடக்ஷனிலேயே ஈ எப்படி இருக்கும் என காட்டச் சொன்னேன். 6 மாதம் கழித்து அவர்கள் காட்டிய காட்சிகள் அருவருப்பாக இருந்தது. அது ஈ போலவே இல்லை, ரோபோட் போல இருந்தது. அதற்குள் படப்பிடிப்பில் 10 கோடி செலவாகிவிட்டது.
ஈ படத்தை நிறுத்த முடிவு செய்தோம்
செலவு 1 கோடிக்குள் இருந்திருந்தால் படத்தை நிறுத்தியிருப்பேன். பின்வாங்க முடியாததால், உண்மையான ஈ-க்களை போட்டோஷூட் செய்ய முடிவு செய்தோம். ஈ-க்களை பிடித்து குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அவை மயக்கமடையும் என அறிந்தோம்.
குளிர்சாதன பெட்டியில் ஈ
ஈ-க்களை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து போட்டோஷூட் செய்தோம். பல சிரமங்களுக்குப் பிறகு, ஈ-யின் உண்மையான நிறம், அசைவுகள் அவர்களுக்கு தெரியும். இவ்வளவு பதற்றம், சிரமத்திற்குப் பிறகு படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது.