சிம்புவின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தை புகழ்ந்த லிங்குசாமி
ஓய்வெடுப்பதற்காக, இறுக்கமான கால அட்டவணைக்கு மத்தியில், சிம்புவின் ' விண்ணைத் தாண்டி வருவாயா'வை மீண்டும் பார்வையிட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Director Lingusamy
இயக்குனர் லிங்குசாமி தற்போது தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் 'தி வாரியர் ' படத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் இப்படத்தில் ராம் பொதினேனி மற்றும் கிருத்தி ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'தி வாரியர்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்காக அயராது உழைத்து வருகிறார் இயக்குனர். இந்நிலையில் ஓய்வெடுப்பதற்காக, இறுக்கமான கால அட்டவணைக்கு மத்தியில் ' விண்ணைத் தாண்டி வருவாயா'வை மீண்டும் பார்வையிட முடிவு செய்ததாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Director Lingusamy
இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது இறுதிப் பணியான #TheWarriorr இல் @menongautham #Vtv என்னைப் புதுப்பித்துக் கொள்ள உதவியது, இத்தனை வருடங்களுக்குப் பிறகும் எழுத்து, இசை மற்றும் காட்சியமைப்பில் அது என்ன ஒரு மேஜிக்கை உருவாக்குகிறது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய காதல் படங்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம். @trishtrashers & @SilambarasanTR_ அவர்களின் நடிப்பால் படம் முழுக்க காதலை சேர்த்திருந்தார்கள்..என எழுதியுள்ளார்.
the warrior
சிலம்பரசன் படத்தை இயக்குநர் லிங்குசாமி பாராட்டியிருப்பது, இருவரும் இணைவது குறித்த ஊகங்களுக்கு வலு சேர்த்துள்ளது. 'தி வாரியர்' படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த 'புல்லட்' பாடலை சிலம்பரசன் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது , மேலும் அந்த பாடல் இசை மேடைகளில் வைரலானது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.