Valimai update : அஜித்தின் சதையெல்லாம் பிய்ந்து, புண்ணாகி...: கொளுத்திப் போட்ட விநோ, பற்றிக் கொண்ட ஃபயர்
வலிமை படத்தின் ஷூட்டிங் சமயத்தில், இக்கட்டான சூழலில் அஜித்தின் தொழில் பக்தியை பார்த்து சிலிர்த்துப் போனதாக இயக்குனர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.
கூகுளின் சர்ச் எஞ்சின் ’அடேய் என்ன விட்டுடுங்கடா!’ என்று பருத்திவீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முத்தழகியாக கதறிக் கொண்டிருக்கிறது. ஏன்னு தெரியுமா ப்ரோ? எல்லாம் நம்ம தல-யின்! அய்யோ ஸாரி, அப்டி சொல்லக்கூடாதுல்ல. எல்லாம் நம்ம ஏ.கே.! அதாவது, அஜித்குமாரின் ரசிகப்பயபுள்ளைகள் இருபத்து நாலு மணி நேரமும் ‘வலிமை அப்டேட்ஸ்’ என்று வெறிகொண்டு தேடுவதினால்தான்.
ஏ.கே. ரசிகர்களுக்கு கூகுள் மேல் ஏன் இந்த கொலவெறி?
அப்படத்தின் ரிலீஸ் தேதி 2022 ஜனவரி 13! என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அபீஸியல் அப்டேட்ஸ்கள் மளமளவென வந்துவிழும் என எக்கச்சக்கமாக எதிர்பார்க்கின்றன ரசிகர்கள். அதனால்தான் இரண்டு கைகளின் பெருவிரல் நுனிகளும் பிய்ஞ்சு பிளீடிங் ஆகுமளவுக்கு சர்வகாலமும் கூகுளை நோண்டி நொங்கெடுக்கிறார்கள்.
பனிக்காலத்தில் இவர்கள் இப்படி அப்டேட் பெட்ஷீட்டை தேடி அலைவதை மிகத் தெளிவாக பயன்படுத்த துவங்கியுள்ளது படத்தின் க்ரூ. அதனால்தான் அடுத்தடுத்து அபீஸியல் அப்டேட்ஸ்களை அள்ளிவிடாமல், அப்பப்ப ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு வெச்சு செய்கிறார்கள். அந்த வகையில் வலிமை படத்தின் இயக்குநரான வினோத், ஒரு தனியார் சேனலுக்கு தந்திருக்கும் சிறப்பு பேட்டியில் சில ஸ்கூப் தகவல்களை தந்திருக்கிறார்.
அதில் படத்தின் ஷூட்டிங் சமயத்தில், இக்கட்டான சூழலில் அஜித்தின் தொழில் பக்தியை பற்றி சிலிர்த்துப் போய் குறிப்பிட்டுள்ளவர்….
“பைக் ஆக்ஷன் சீன் ஷூட் பண்றப்ப, எதிர்பாராதவிதமா அஜித் பைக்ல இருந்து விழுந்துட்டார். காயம். அவரை ரெண்டு, மூணு நாளுக்கு ரெஸ்ட் எடுக்க தயாரிப்பாளர் போனிகபூர் சொன்னார். ஆனா அஜித் கேட்கல.
ஆக்சுவலா அது, பைக் சேஸிங் சீன். அதுக்கு மூணு லேயர் உடைகளை அணியணும். அவருக்கு அடிபட்டதாலே சதை பிய்ஞ்சு, புண்ணாகியிருந்துச்சு. அந்த நிலைமையில அப்படி மூணு லேயர் காஸ்ட்யூமை போட்டுட்டு, பைக்கை ஓட்டி, திரும்பத் திரும்ப நடிக்கிறது மிகப்பெரிய வேதனை, எரிச்சலான விஷயம். ஆனால் அதையெல்லாம் மனசுல ஏத்திக்காம, அந்த மூணு லேயர் உடைகளை போட்டுக்கிட்டு மறுநாளே நைட் ஷூட்டிங்குக்கு வந்து நின்னார். அதான் அஜித்!” என்றிருக்கிறார்.
அஜித்தை வைத்து படம் இயக்கும் ஒவ்வொரு இயக்குநரும், அதன் ப்ரமோ பேட்டிகளில் அஜித்தின் தொழில்பக்தி பற்றி சிலாகிப்பது இயல்பான நெகிழ்வு. அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் இயக்கிய சிறுத்தை சிவாவெல்லாம் ஒவ்வொரு படத்தின் ப்ரமோவிலும் மணிக்கணக்காக இதை பேசியிருக்கிறார்.
valimai shooting spot photos
ஹும், எல்லாம் ஓ.கே.தான்! ஆனால் நாலு படத்துக்கு ஒரு அஜித் படம்தான் மாஸ் ஹிட்டடிக்குது. அதுதான் ஏன் அப்படின்னு புரியலை!? என்பதே அஜித்தின் டைஹார்டு விசிறிகள் அல்லாத பொதுவான சினிமா விரும்பிகளின் கமெண்ட்.... கரெக்ட்தான்!