காதல் படங்களின் காட்ஃபாதர்! கெளதம் மேனன் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?
தமிழ் சினிமாவில் பல கிளாசிக் ஹிட்டான ரொமாண்டிக் படங்களை இயக்கியதன் மூலம் பேமஸ் ஆன இயக்குனர் கெளதம் மேனன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

Gautham Menon
இயக்குனர் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் மின்னலே என்கிற மாஸ்டர் பீஸ் படம் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் கெளதம் மேனன். முதல் படத்திலேயே முத்திரை பதித்த கெளதம் மேனன், அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் இணைந்து காக்க காக்க என்கிற படத்தை கொடுத்தார். அப்படமும் கிளாசிக் ஹிட் படமாக மாறி இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
Director Gautham Menon
இதையடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் உடன் கூட்டணி அமைத்த கெளதம் மேனன், அவரை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தை இயக்கினார். கமலின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக இது மாறியது. இப்படி முதன் மூன்று படங்களிலேயே உச்சம் தொட்ட கெளதம் மேனன் பின்னர் நடிகர் சூர்யாவை வைத்து வாரணம் ஆயிரம் என்கிற படத்தை இயக்கினார். அப்படம் காதலர்களின் பேவரைட் லிஸ்ட்டில் இடம்பிடித்தது. இதையடுத்து சிம்புவை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா என்கிற படத்தை இயக்கினார் கெளதம் மேனன்.
இதையும் படியுங்கள்... துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போ? குட் நியூஸ் சொன்ன கெளதம் மேனன்
Gautham Menon Birthday
நடிகர் சிம்புவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை அப்படம் ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அப்படம் ரிலீஸ் ஆகி 15 ஆண்டுகள் கடந்தபோதிலும் இன்றளவும் அதற்கு ஈடு இணையாக எந்த காதல் படமும் ரிலீஸ் ஆகவில்லை. அந்த படத்தை பார்த்தால் காதலில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட காதல் வந்துவிடும் அந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாக எடுத்திருப்பார் கெளதம் மேனன். அப்படத்துக்கு பின் அஜித்தை வைத்து என்னை அறிந்தால், சிம்புவின் அச்சம் என்பது மடமையடா, தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை இயக்கினார்.
Gautham Menon Salary
இயக்குனராக ஜொலித்துக் கொண்டிருந்த அவர், தயாரிப்பாளராகி சில படங்களை தயாரித்தார். அப்படங்களால் கடன் நெருக்கடியிலும் சிக்கினார். அதில் இருந்து மீள்வதற்காக நடிகராக அறிமுகம் ஆன கெளதம் மேனன், தற்போது முழு நேர நடிகராகவே மாறிவிட்டார். நீண்ட நாட்களுக்கு பின்னர் மம்முட்டியை ஹீரோவாக வைத்து டொமினிக் என்கிற படத்தை இயக்கினார். அப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
Gautham Menon Net Worth
அடுத்ததாக வெற்றிமாறன் கதையம்சத்தில் ரவி மோகன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் கெளதம் மேனன். இந்நிலையில், இன்று அவர் தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே அவரது சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் ரூ.35 கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கம்பேக் கொடுத்தாரா கெளதம் மேனன்? டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் விமர்சனம்