'தி மெட்ராஸ் மர்டர்' வெப் தொடரில் இணைந்த பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்..
ஏ.எல். விஜய் குறித்த புதிய தகவலாக ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ள 'மெட்ராஸ் மர்டர்' என்னும் வெப் தொடரில் இவர் இணைந்துள்ளார். 1940 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் போது நடந்த ஒரு கொலையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் உருவாகியுள்ளது.
A L Vijay
கோலிவுட்டில் பிரபல இயக்குனராக இருப்பவர் ஏ எல் விஜய். இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அஜித்தின் கிரீடம் மூலம் அறிமுகமான இவருக்கு மதராசபட்டினம் சரியான அறிமுகத்தை கொடுத்தது. இதன் பின்னர் இவர் இயக்கிய தெய்வத்திருமகள், தாண்டவம் உள்ளிட்ட படங்கள் வரவேற்பு பெற்றனர்.
A L Vijay
இதற்கு இடையே ஒரு பிரபல நடிகை அமலாபாலை கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த நட்சத்திர தம்பதிகள் விவாகரத்து பெற்றனர். இதை அடுத்து இருவரும் அவரவர் பாதையில் சென்று விட்டனர்.ஏ.எல் விஜய் சமீபத்தில் மறுமணமும் செய்து கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு...கார்த்தி வெளியிட்ட ...சீதா ராமம் ட்ரைலர்..நாயகியை தேடும் ராஷ்மிகா..துல்கர் சல்மான்..
இவர் இறுதியாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் பாலிவுட் நாயகி கங்கனா நடித்திருந்தார். தற்போது இவர் குறித்த புதிய தகவலாக ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ள 'மெட்ராஸ் மர்டர்' என்னும் வெப் தொடரில் இணைந்துள்ளார். 1940 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் போது நடந்த ஒரு கொலையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் உருவாகியுள்ளது.
A L Vijay
மேலும் செய்திகளுக்கு....லண்டனிலிருந்து வர மனமில்லை..டாக்டர் நாயகி பிரியங்கா மோகனின் பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்
அப்போது சினிமா பிரபலங்கள் குறித்தும், சினிமாவில் அவர்களுக்கு ஈடுபாடு குறித்தும் அவதூறான செய்தியை எழுதிய பத்திரிகையாளர் கொல்லப்பட்ட சம்பவம் தான் அது. இந்த தொடரில் இயக்குனர் ஏ.எல்.விஜய் நிகழ்ச்சி தொகுப்பாளராக வருவார் என தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு...சிம்புவுக்கு கிடைக்காத சிறப்பை அறிமுக படத்திலேயே தட்டி தூக்கிய தி லெஜண்ட்.. என்ன விஷயம் தெரியுமா?
தனது பங்கேற்பு பற்றி சமீபத்தில் பேசிய இயக்குனர், மிகவும் சவாலான மற்றும் மதிப்புமிக்க திட்டத்துடன் இணைந்திருப்பதை உணர்கிறேன். மெட்ராஸ் பிரசிடென்சியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தி மெட்ராஸ் மர்டர் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் மகத்தான மற்றும் அற்புதமான அனுபவத்தை அளிக்க சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தை டிஜிட்டல் திரையில் மீண்டும் உருவாக்க ஒட்டுமொத்த குழுவும் அதிகபட்ச முயற்ச்சியை மேற்கொண்டு வருகிறது என கூறியுள்ளார்.