நடிகர் பிரபுவுக்கு மூளையில் அறுவைசிகிச்சையா? உண்மையில் நடந்தது என்ன?
பிரபல நடிகரும் நடிகர் பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
Actor Prabhu brain surgery latest news
பிரபல நடிகரும் நடிகர் சிவாஜி கணேசனின் மகனுமான பிரபுவுக்கு சமீபத்தில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் கிடைத்துள்ள தகவலின்படி, பிரபு தற்போது நலமுடன் இருப்பதாகவும், உடல்நிலை சீராகவும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Sivaji Ganesan Son Prabhu brain surgery recovery
நடிகர் பிரபு கடுமையான தலைவலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்யவேண்டிய தேவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Prabhu brain surgery report
இந்நிலையில், அண்மையில் கிடைத்துள்ள அறிக்கையில், பிரபு தற்போது நலமுடன் இருப்பதாகவும், உடல்நிலை சீராகவும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மருத்தவர்களும் குடும்பத்தினரும் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர்.
Actor Prabhu Surgery News
தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான பிரபு, சமீப காலமாக சிறந்த குணச்சித்திரக் கலைஞராக மாறியுள்ளார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகராக குறிப்பிடத்தக்க கேரக்டர்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார். அவரது உடல்நிலை குறித்து வெளியான செய்தி ரசிகர்களையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Prabhu Ganesan Family
"மருத்துவர்கள் அவரது மூளையில் அனீரிஸம் இருப்பதைக் கண்டறிந்தனர். ஒரு தமனியில் வீக்கம் காணப்பட்டது. இதனால் உடனடி அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, பிரபு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் தனது குடும்பத்தினரின் கண்காணிப்பில் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை" என பிரபுவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.
Prabhu Health Update
இதற்கிடையில், ரசிகர்கள் மற்றும் அவரது நலன்விரும்பிகள் சமூக ஊடகங்களில் பிரபுவுக்காக பிரார்த்தனை செய்வதாக உருக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர். நடிகர் பிரபு விரைவில் குணமடைய பலர் வாழ்த்தி கூறியுள்ளனர். சீக்கிரமே அவர் நலம் பெற்று பழையபடி நடிக்கத் தொடங்குவார் என நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.