Dhanush : பிரிவுக்கு பின் முதன்முறையாக பேசிக்கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா! வைரலாகும் டுவிட்டர் உரையாடல்
Dhanush : நேற்று பயணி மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டது. இதற்காக ஐஸ்வர்யாவுக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்தன. இதில் ரசிகர்களை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விஷயம் என்றால், அது தனுஷ் வாழ்த்து தெரிவித்தது தான்.
தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு
நடிகர் தனுஷ் கடந்த 20014-ம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரு குடும்பத்தார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இத்தம்பதி கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து செய்யப்போவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தனர்.
விவாகரத்து வேண்டாம் என முடிவு
இவர்களது இந்த அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மகளின் இந்த முடிவால் சூப்பர்ஸ்டாரும் மனமுடைந்து போனார். இதையடுத்து அவர்கள் இருவரையும் எப்படியாவது சேர்த்து வைக்க குடும்பத்தினரும், நண்பர்களும் முயன்றனர். அதன் பலனாக இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டனர். ஆனால் சேர்ந்து வாழப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர்.
சினிமாவில் பிசி
பிரிவுக்கு பின் தனுஷும், ஐஸ்வர்யாவும், தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். தனுஷ், வாத்தி, செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதே வேளையில் நடிகை ஐஸ்வர்யாவும் இயக்குனராக சினிமாவில் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதன்படி 9 ஆண்டுகளுக்கு பின் அவர் பயணி என்கிற இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டுள்ளார்.
ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் வாழ்த்து
நேற்று பயணி மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டது. இதற்காக ஐஸ்வர்யாவுக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்தன. இதில் ரசிகர்களை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விஷயம் என்றால், அது தனுஷ் வாழ்த்து தெரிவித்தது தான். அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த தனுஷ், தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள்... கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்
நன்றி சொன்ன ஐஸ்வர்யா
இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.. என்னது தோழியா?.. அப்போ மனைவி இல்லையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். தனுஷின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஐஸ்வர்யா, அவரது வாழ்த்தை தெய்வீகம் என குறிப்பிட்டுள்ளார். பிரிவுக்கு பின் இருவரும் தற்போது தான் முதன்முறையாக பேசிக்கொண்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... Nayanthara : விக்னேஷ் சிவனின் நீண்ட நாள் ஆசை... சர்ப்ரைஸாக நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா