டிசம்பரில் ரிலீஸ் இல்லை... தள்ளிப்போனது தனுஷின் வாத்தி - புது ரிலீஸ் தேதி அறிவிப்பு
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நானே வருவேன் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதனிடையே அடுத்ததாக தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வந்தது. இப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் தனுஷ். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்க் அட்லூரி இயக்கி உள்ளார்.
வாத்தி படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்திருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது. தமிழில் வாத்தி என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தெலுங்கில் சார் என்கிற பெயரில் தயாராகி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் சர்ச்சை ராணி நயன்தாரா... காதல், கல்யாணம் முதல் குழந்தை பெற்றது வரை அவர் எதிர்கொண்ட சர்ச்சைகள்..!
இதனிடையே வாத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 2-ம் தேதி ரிலீசாகும் என கடந்த செப்டம்பர் மாதமே படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் படத்தின் பின்னணி பணிகள் அதற்குள் முடிக்க முடியாத காரணத்தால் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், அதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளது. இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் தனுஷ் வாத்தியாராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... வாவ்... கௌதம் கார்த்தி - மஞ்சிமா மோகன் திருமண பத்திரிக்கையில் இப்படி ஒரு ஸ்பெஷலா? குவியும் பாராட்டு!