MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உலகளவில் மாஸ் காட்டிய திருச்சிற்றம்பலம்..தனுஷ் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

உலகளவில் மாஸ் காட்டிய திருச்சிற்றம்பலம்..தனுஷ் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

விக்ரமின் கோப்ரா திருச்சிற்றம்பலத்திற்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் அந்த படம் போதுமான வரவேற்பை பெறாததால் தனுஷின் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Sep 06 2022, 11:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
thiruchitrambalam

thiruchitrambalam

சமீபத்திய வெளியிடான கமலஹாசனின் விக்ரம் மற்றும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படங்கள் இந்த ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய தமிழ்  படங்களாக உருவாக்கியுள்ளது. ஆகஸ்ட் 18 அன்று வெளியான திருச்சிற்றம்பலம் சுமார் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாகும்.

 இந்த படம் செப்டம்பர் 5 வரை உலக அளவில் வசூல் செய்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தனுஷின் படம் 94.25 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாகவும்,தனுஷின் ஹிந்தி பிளாக் பாஸ்டர் ரஞ்சனாவுக்கு பிறகு உலக அளவில் அவர் செய்த மிகப்பெரிய வசூல் இதுதான் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு விரைவில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் படம் சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
thiruchitrambalam

thiruchitrambalam

பாக்ஸ் ஆபிஸில் அபார வெற்றியை பதிவு செய்துள்ள திருச்சிற்றம்பலம் வார இறுதியில் ரூபாய் 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தெரிகிறது. ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியான விக்ரமின் கோப்ரா திருச்சிற்றம்பலத்திற்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் அந்த படம் போதுமான வரவேற்பை பெறாததால் தனுஷின் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...5 மொழி குரல் கொடுத்த பிரபலங்களை அறிமுகம் செய்த...பொன்னியின் செல்வன் தயாரிப்பு நிறுவனம்...

34
thiruchitrambalam

thiruchitrambalam

முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன், பாலிவுட்டில் கலாட்டா கல்யாணம், ஹாலிவுட்டில் தி கிரே மேன் என அடுத்தடுத்த படங்களும் ஓடிடியில் தான் வெளியானது. இதனால் இரண்டு வருட காலங்களாக தனுஷை திரையில் காணாத ரசிகர்கள் ஏக்கத்தில் காத்திருந்தனர். அவர்களை குதூகலப்படுத்தும் விதமாக வெளியானது திருச்சிற்றம்பலம்.

மேலும் செய்திகளுக்கு...வாவ்...வாட்டர் கிராசிங்கில் மாஸ் காட்டும் அஜித்..வைரலாகும் சூப்பர் தூள் வீடியோ

44
thiruchitrambalam

thiruchitrambalam

இதில் தனுஷ், நித்யா மேனன் , பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கண்ணா , பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.  மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நீண்ட இடைவெளிக்கு பிறகு அனிருத் ரவிச்சந்தர் தனுஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

மேலும் செய்திகள்: பளபளக்கும்... மினுமினுக்கும் 'சொப்பன சுந்தரி' ஆக மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Recommended image2
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved