குடும்ப பிரச்சனையிலும் காப்பாற்றியவர் தனுஷ்..! கண்கலங்கிய ரோபோ ஷங்கர்!
சின்னத்திரையில் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கியவர் ரோபோ ஷங்கர். மெல்ல மெல்ல, தன்னுடைய திறமைகளை வளர்த்து கொண்டு, தற்போது தனுஷ், அஜித், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.
இவருடைய திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்றால் அது, தனுஷுடன் நடித்த 'மாரி' திரைப்படம் தான்.
இவரை தொடர்ந்து இவரது மனைவியும், சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் அசத்தி வருகிறார். விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான 'பிகில்' படத்தில் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனுஷ் ரசிகர் ஒருவரின் உணவகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரோபோ ஷங்கர் நெஞ்சம் நெகிழ வைக்கும் விதத்தில் கண் கலங்கியபடி தனுஷ் செய்த உதவிகள் குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்.... தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் இல்லை, அதையும் தாண்டி வாழ்க்கை கொடுத்தவர்.
தென்னிந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் தனுஷ்தான். கொரோனா காலத்தில் என்னுடைய குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை இருந்தது.
அதனை எப்படி சமாளிப்பது என தெரியாமல் தவித்தேன், தனுஷுக்கு போன் செய்தபோது அவர் டெல்லி செல்ல தயாராகி வருவதாக கூறினார்.
அந்த சமயத்தில் என்னுடைய பிரச்னையை எப்படி கூறுவது என்பது கூட தெரியவில்லை, தயக்கத்துடனே கேட்டேன். கேட்டதுமே குடும்ப ரீதியான மிகப்பெரிய உதவியைச் செய்தார்.
நான் இன்று என் குடும்பத்துடன் மூன்று வேளை நிம்மதியாகச் சாப்பிடுவதற்கான ஆரம்பப் புள்ளியைப் பல இயக்குநர்கள் வைத்திருந்தாலும், என் வாழ்க்கையை உயர்த்தியவர் தனுஷ்தான் என கண்கலங்கியபடி கூறியுள்ளார்.