- Home
- Cinema
- ஹீரோ.. வில்லன் என டபுள் ஆக்ஷனில் மிரட்டும் தனுஷ்... நானே வருவேன் ரிலீஸ் அப்டேட் உடன் வந்த மாஸான போஸ்டர்கள்
ஹீரோ.. வில்லன் என டபுள் ஆக்ஷனில் மிரட்டும் தனுஷ்... நானே வருவேன் ரிலீஸ் அப்டேட் உடன் வந்த மாஸான போஸ்டர்கள்
Naane Varuven : செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் ரிலீஸ் அப்டேட் உடன் கூடிய 2 போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு உள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் ரிலீசான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் பணியாற்றிய தனுஷ் - செல்வராகவன் காம்போ 11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ளதால் நானே வருவேன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா, எல்வி ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... அசுரன் படத்தின் வசூல் சாதனையை நான்கே நாட்களில் அடிச்சு தூக்கிய திருச்சிற்றம்பலம்... தனுஷ் ஹாப்பியோ ஹாப்பி
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதில் நடிகர் தனுஷ் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், நானே வருவேன் படத்தின் மாஸான இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு ரிலீஸ் குறித்த முக்கிய தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தனுஷின் ஹீரோ மற்றும் வில்லன் லுக் அடங்கிய அந்த இரண்டு போஸ்டர்களிலும் இப்படம் விரைவில் தியேட்டர்களில் ரிலீசாகும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்படத்தை செப்டம்பர் 30-ந் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சினிமா தொழிலாளர்களை கண்டு கொள்ளாத நடிகர்கள் மத்தியில்.. சிரஞ்சீவி எடுத்த அதிரடி முடிவு! குவியும் பாராட்டுக்கள்