- Home
- Cinema
- திரையை கிழித்து தனுஷ் ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி..! கடும் அப்சட்டில் திரையரங்கு உரிமையாளர்..!
திரையை கிழித்து தனுஷ் ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி..! கடும் அப்சட்டில் திரையரங்கு உரிமையாளர்..!
நடிகர் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் இன்று வெளியான நிலையில், தனுஷ் ரசிகர்கள் திரைப்படம் திரையிடும் திரையை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் கடைசியாக 'மாறன்' திரைப்படம் ஓடிடியில் வெளியான நிலையில், அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. கர்ணன் படத்திற்கு பின்னர் இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்று வந்ததால் கோலிவுட்டில் சரிவை சந்தித்து வந்த தனுஷ் பெரிதும் நம்பி காத்திருந்த திரைப்படம், 'திருச்சிற்றம்பலத்தை' தான். இன்று உலகம் முழுவதும் வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இன்று காலை முதலே, தனுஷின் ரசிகர்கள் ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டத்தோடு இந்த படத்தை வரவேற்றனர். தனுஷும் படக்குழுவினருடன் மிகவும் உட்சாகமாக, முதல் நாள் முதல் கட்சியை ரசிகர்களுடன் ரோகிணி திரையரங்கில் கண்டு ரசித்தார். இதில் நடிகர் தனுஷின் மகன் யாத்ரா, நடிகை ராசி கண்ணா, இசையமைப்பாளர் அனிருத் போன்ற படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
மேலும் செய்திகள்: ரோட்டில் நின்று கொண்டே... குட்டை டவுசரில் விக்கியூடன் கண்டமேனிக்கு ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா! ஹாட் போட்டோஸ்!
இது ஒருபுறம் இருக்க, தனுஷ் படம் பார்த்த... ரோகிணி திரையரங்கில், தனுஷின் ரசிகர்கள் கொண்டாட்டம் என்கிற பெயரில், திரையரங்கில் படம் பார்க்கும் திரையை தாறுமாறாக கிழித்துள்ளனர். இதனால் திரையரங்கு உரிமையாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் இப்படி செய்ததால், அடுத்த காட்சியை குறித்த நேரத்தில் திரையிடுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என நடிகர்கள் கூறிவரும் நிலையிலும், முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் அத்து மீறி அட்ராசிட்டியில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது.
மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில், தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் தனுஷ் படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார், இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்திற்கும் அதே அளவிலான வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: பெத்த மகனை விட்டு விட்டு.. திரையரங்கில் நடிகையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடும் தனுஷ்! வீடியோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.