கர்ணனாக மாறி... வயநாடு மக்களுக்கு நிவாரண நிதியை வாரி வழங்கிய தனுஷ்... அதுவும் இவ்வளவா?
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பெரும் தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார் தனுஷ்.
wayanad
வயநாட்டில் கடந்த மாத இறுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று நிலச்சரிவில் மூன்று கிராமங்கள் ஒட்டுமொத்தமாக மண்ணில் புதைந்தன. இதில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோரில் நிலை என்னவென்றே தெரியவில்லை. தோண்ட தோண்ட மனித உடல்களாக கிடைப்பதால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடரால் அங்குள்ள மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
wayanad landslide
வயநாடு மக்களுக்கு உதவிட அண்டை மாநிலங்களில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் முதல்வரின் நிவாரண நிதிக்கு பெரும் தொகையை வழங்கிய வண்ணம் உள்ளனர். தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர் பிரபாஸ் ரூ.2 கோடியும், நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் ஆகியோரு ரூ.1 கோடியும், நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சமும் வழங்கி இருந்தனர்.
இதையும் படியுங்கள்... இரண்டாவது திருமணம்... சமந்தாவின் முடிவு என்ன? அவரே அளித்த சூசக பதில் இதோ
wayanad landslide photos
அதேபோல் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களில் நடிகர் சியான் விக்ரம் ரூ.20 லட்சமும், நடிகை நயன்தாரா ரூ.25 லட்சமும், நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் சேர்ந்து ரூ.50 லட்சமும், நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.20 லட்சமும் வழங்கி இருந்தனர். இந்த நிலையில், நடிகர் தனுஷ் பெரும் தொகையை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கி தன்னால் முடிந்த உதவியை செய்திருக்கிறார்.
dhanush
அதன்படி நடிகர் தனுஷ் ரூ.25 லட்சத்தை கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார். வயநாடு மக்களுக்காக கர்ணானாக மாறி தனுஷ் செய்த இந்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அண்மையில் தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்திருந்த ராயன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... GOAT Trailer : என்ன நண்பா ரெடியா... சர்ப்ரைஸாக வெளியாகிறது கோட் பட டிரைலர் - எப்போ ரிலீஸ் தெரியுமா?