10 வயதை குறைத்த தனுஷ்..புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்!
பல கிலோவைக் குறைத்துள்ள தனுஷின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

dhanush the gray man
முன்னணி நாயகர்களின் மஒருவராகி விட்ட தனுஷ் விமர்சங்களை தாண்டி பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்து வருகிறார். இவர் கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டை அடுத்து நேராக ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து விட்டார். தி ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கியதில் தனுஷ, ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் நடித்த 'தி கிரே மேன்' ஜூலை 15 ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் இல் வெளியிடப்படுகிறது.
Dhanush
செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மேலும் அவரது ஒரு கெட்அப் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனது மற்றொரு படமான 'திருச்சிற்றம்பலம்' படத்தில், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா மற்றும் நித்யா மேனன் ஆகிய மூன்று கதாநாயகிகளுடன் தனுஷ் நடிக்கிறார்.
dhanush
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தனுஷின் படம் ரசிகர்களை ஆழ்த்தியுள்ளது. ஏறக்குறைய பள்ளிப் பையனைப் போல பத்து வயது இளமையாக தோன்றுவதற்காக பல கிலோவைக் குறைத்துள்ள தனுஷின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாத்தி படத்தில் மாஸ்டர் மற்றும் ஸ்டூடண்ட் வேடத்தில் நடித்து வருகிறார்.