தங்கம்போல் தகதகவென மின்னும் சேலையில்... இடுப்பழகு தெரிய போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் போட்டோஸ்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தங்க நிற சேலையில் தேவதை போல் காட்சியளிக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் நானிக்கு ஜோடியாக இவர் நடித்த தசரா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
ஸ்ரீகாந்த் ஒடேலா என்கிற புதுமுக இயக்குனர் இயக்கிய இப்படம் பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியால் செம்ம குஷியில் உள்ளாராம் கீர்த்தி.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழில் சைரன், மாமன்னன், ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சைரன் படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி.
இதையும் படியுங்கள்... போதும்டா சாமி ஆள விடுங்க..! சாகுந்தலம் பிளாப் ஆனதால் சமந்தா இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாரா?
அதேபோல் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் மாத இறுதியில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் தசரா படத்தின் புரமோஷனின் போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தனக்கு மிகவும் பிடித்த லுக் என குறிப்பிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தகதகவென மின்னும் தங்கநிற சேலையில், இடுப்பழகு தெரிய போஸ் கொடுத்தபடி நடிகை கீர்த்தி சுரேஷ் நடத்தியுள்ள அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... திருத்தப்பட்ட ஒளிப்பதிவு முன்வரைவு சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி