- Home
- Cinema
- AR முருகதாஸூக்கு ஏழரையாக அமையும் டைட்டில்; அவரின் பிளாப் படங்களுக்குள் இப்படி ஒரு ஒற்றுமையா?
AR முருகதாஸூக்கு ஏழரையாக அமையும் டைட்டில்; அவரின் பிளாப் படங்களுக்குள் இப்படி ஒரு ஒற்றுமையா?
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அண்மையில் சல்மான் கானை வைத்து இயக்கிய சிக்கந்தர் படம் தோல்வி அடைந்துள்ள நிலையில், அவரின் தோல்வி படங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை பற்றி பார்க்கலாம்.

Similarities in AR Murugadoss Flop Movie Titles
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை மட்டுமே கொடுத்த இயக்குனர்களில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒருவர். தீனா படம் மூலம் அறிமுகமான இவர், அடுத்தடுத்து இயக்கிய ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி என தொடர்ச்சியாக 5 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார். இதையடுத்து அவர் இயக்கிய சர்கார் படம் சுமாரான வெற்றியை பெற்றது. அதன்பின் இயக்கிய ஸ்பைடர், தர்பார், சிக்கந்தர் ஆகிய மூன்று படங்களும் தொடர்ச்சியாக தோல்வியை தழுவின.
AR Murugadoss Flop Movies
ஏ.ஆர்.முருகதாஸின் பிளாப் படங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை
இதனால் அவுட்டேட்டட் இயக்குனர் என விமர்சிக்கப்படுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அவரின் தோல்விப் படங்களுக்கு இடையே ஒரு அதிர்ச்சியூட்டும் ஒற்றுமையும் உள்ளது. அது என்னவென்றால், அவர் இயக்கத்தில் தோல்வி அடைந்த படங்கள் அனைத்தின் டைட்டிலுமே R என்கிற எழுத்தில் தான் முடிவடைந்துள்ளது. உதாரணத்துக்கு DarbaR, SpydeR, SikandaR ஆகிய மூன்று தோல்வி படங்களின் டைட்டிலுமே R என்கிற எழுத்தில் தான் முடிவடைந்துள்ளன. இதுதவிர விஜய்யை வைத்து அவர் இயக்கிய படங்களில் சுமாரான படம் என்றால் அது சர்கார் தான். அப்படத்தின் டைட்டிலும் R-ல் தான் முடிவடையும்.
இதையும் படியுங்கள்... ஷங்கர் முதல் முருகதாஸ் வரை; ஒரு காலத்துல எப்படி இருந்த இயக்குனர்கள்; இப்போ இப்படி ஆகிட்டாங்களே!
AR Murugadoss Hit Movies
ஏ.ஆர்.முருகதாஸின் ஹிட் படங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை
அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஹிட் படங்களிடையேயும் சில ஒற்றுமைகள் இருக்கிறது. அவர் இயக்கிய முதல் இரண்டு வெற்றிப்படங்களான அஜித்தின் தீனா மற்றும் விஜயகாந்தின் ரமணா ஆகிய படங்களின் டைட்டில் A என்கிற எழுத்தில் நிறைவடையும். இதையடுத்து அவர் இயக்கிய சூர்யாவின் கஜினி, விஜய்யின் துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய படங்களின் டைட்டில் I என்கிற எழுத்தில் நிறைவு பெறும். இதனால் I என்கிற எழுத்தில் நிறைவடையும் படி அவர் டைட்டில் வைத்தால் படம் கன்பார்ம் ஹிட் தானாம்.
Madharasi Movie
மதராஸி படத்தின் நிலைமை என்ன?
சிக்கந்தர் படத்தின் தோல்வியால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஏனெனில் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக இயக்கியுள்ளது சிவகார்த்திகேயன் படத்தை தான். ஆனால் அப்படம் ஹிட்டாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அப்படத்திற்கு மதராஸி என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் தலைப்பு I என்கிற எழுத்தில் முடிகிறது. இதற்கு முன் அந்த எழுத்தில் முடியும்படி அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை சற்று ஆறுதல் படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இப்படி ஒரு ஆசையா? அதுக்கு அவர் ஓகே சொல்வாரா?