ரஜினிகாந்த் காலில் விழுந்து வணங்க ரிகர்ஷல் பாத்துட்டு வந்த நடிகை: நடந்தது வேறு: ஷாக்கான நடிகை!
Dakshayini Talk About Annamalai Movie First Day Shoot : ரஜினிகாந்த் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்பதற்காக நடிகை ஒருவர் ரிகர்ஷல் எல்லாம் எடுத்துட்டு வந்துருக்காரு, ஆனால், நடந்ததை பார்த்து ஷாக் ஆயிவிட்டாராம்.
Dakshayini Talk About Annamalai Movie First Day Shoot, Rajinikanth Upcoming Movies
Dakshayini Talk About Annamalai Movie First Day Shoot : உலகமே ரசிக்கும் நடிகர்களில் ஒருவர் தான் ரஜினிகாந்த். சினிமா வாய்ப்புக்காக இவர் படாத கஷ்டங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கஷ்டங்களை எதிர்கொண்டு வந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ரஜினி மீது விமர்சனங்கள் வருவது இயல்பான ஒன்று தான். மற்றவர்களிடம் அவர் காட்டும் அன்பிற்கும், பாசத்திற்கும் அளவே இல்லை. இது தன்னுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கும் பொருந்தும். கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் நல்ல வரவேற்பு பெற்றது.
Dakshayini Talk About Annamalai Movie First Shoot, Rajinikanth Upcoming Movies
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தையும் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இருவரும் இணைந்து அந்த அறிவிப்பு டீசர் புரோமோவில் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் நடிகை தாக்ஷாயினி அண்ணாமலை படம் குறித்தும், ரஜினிகாந்த் பற்றியும் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
Annamalai Rajinikanth Daughter, Dakshayini Talk About Annamalai Movie First Shoot
அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்துக்கு மகளாக நடிக்க தாக்ஷாயினி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பிறகு ஷூட்டிங்கிற்கு எப்படி ரெடியானார் என்பது பற்றி அவர் கூறியிருப்பதாவது: முதல் நாள் ஷூட்டிங்கிற்கு எப்படி ரெடியாக வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் யோசித்து கொண்டிருந்தேன். அதோடு ரஜினியின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்பதற்காக ரிகர்ஷல் பார்த்தேன். முதல் நாள் ஷூட்டும் வந்துச்சு, அங்கு போன பிறகு எனக்கு ஒரே ஷாக். ஏனென்றால், என்னுடைய தோளில் கை போட்டு ரஜினிகாந்த் என்னுடைய மகளாக இவர் தான் நடிக்கிறார், இவருடைய பெயர் தாக்ஷாயினி என்று எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
Dakshayini, Annamalai, Annamalai Rajinikanth
என்னடா நாம் அவரது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று ரிகர்ஷல் பார்த்தோம். ஆனால், அவர் என்னுடைய தோளில் கை போட்டு தன்னுடைய மகள் என்று அறிமுகம் செய்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது என்று கூறியுள்ளார். இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் தொடரில் நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ பதிவிட்டிருந்தார்.