பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், கத்ரீனா கைஃப்க்கு கோவிட் பாசிட்டிவ் !
பாலிவுட் நடிகர் ஷாருக் கான், பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

akshaykumar
குறைந்து வந்த கொரோனா தொற்று சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. முந்தைய அலை போலவே இதுவும் முதலில் திரைத்துறையினரை தான் குறி வைத்து வருகிறது. முன்னதாக பாலிவுட் நாயகன் அக்ஷய் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார்.
Shah Rukh Khan
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், கார்த்திக் ஆர்யன், நடிகை கத்ரீனா கைப் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இவர்கள் அனைவரும் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டனர்.அவர்களை சந்தித்தவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Shah Rukh Khan
சமீபத்தில் தான் இயக்குனர் அட்லீயின் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா நாயகியாக உள்ளார். இந்த படத்திலிருந்து டைட்டில் மற்றும் டீசர் வெளியானது. இந்த டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது ரசிங்கர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.