MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஐஸ்வர்யா - தனுஷு இணைகிறார்களா? நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

ஐஸ்வர்யா - தனுஷு இணைகிறார்களா? நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து, இவர்களுடைய விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 08 2024, 11:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Aishwarya And Dhanush

Aishwarya And Dhanush

கோலிவுட் திரை உலகில், தன்னுடைய தந்தை மற்றும் அண்ணன் செல்வராகவன் உதவியோடு 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவரின் முதல் படம் வெற்றிப்படமாக அமைந்த போதிலும், தோற்றத்தின் காரணமாக அதிக அளவிலான விமர்சனங்களுக்கு ஆளானார். ஆனால் அந்த விமர்சனங்களை தன்னுடைய வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி, மிக குறுகிய காலத்தில் பல தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட, இளம் நடிகராக மாறினார்.

திரை உலக பயணத்தில்.... முன்னணி இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருந்த தனுஷ், 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம், திரையுலகமே மெச்சும் அளவுக்கு மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Aishwarya And Dhanush Divorce Case

Aishwarya And Dhanush Divorce Case

திருமணத்திற்கு பின்னர் நடிகர் என்பதைத் தாண்டி, பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என தன்னுடைய பன்முகத் திறமையை திரையுலகில் வெளி காட்டிய தனுஷ்... தமிழ் படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.

தனுஷ் ஐஸ்வர்யா ஜோடிக்கு யாத்ரா - லிங்கா என இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஐஸ்வர்யாவும் தனுஷும் கடந்த 2022 ஆம் ஆண்டு... இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனம் ஒற்று பிரிந்து செல்ல உள்ளதாக அறிவித்தனர்.

34
Aishwarya And Dhanush Son's

Aishwarya And Dhanush Son's

தனுஷ் ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்க ஒரு வருடத்திற்கு மேலாக இரு வீட்டு தரப்பில் இருந்தும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஐஸ்வர்யா - தனுஷ் இருவருமே தங்களுடைய முடிவில் தீர்மானமாக இருந்தனர்.  மேலும் இவர்களுடைய குழந்தைகளும் இவர்களின் முடிவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து, அம்மா - அப்பா என இருவரிடமும் மாறி மாறி வசித்து வருகின்றனர்.

ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்த தனுஷ் - ஐஸ்வர்யா தங்களின் வாழ்க்கையில் விவாகரத்து பெற்று பிரியும் முடிவை எடுத்ததற்கான பல காரணங்கள் யூகத்தின் அடிப்படையில் சமூக வலைதளத்தில் வெளியானாலும், இதுவரை ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருமே தங்களுடைய விவாகரத்துக்கான காரணத்தை ஒரு முறை கூட கூறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு விவாகரத்துக் கூறி ஐஸ்வர்யா தனுஷ் நீதிமன்றத்தை நாடிய நிலையில்... இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.

44
Aishwarya And Dhanush Divorce Case Postpone

Aishwarya And Dhanush Divorce Case Postpone

இந்நிலையில் நேற்று தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் இந்த வழக்கை அக்டோபர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து இருவருக்குமே விவாகரத்தில் உடன்பாடு இல்லையா? என சில பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved