- Home
- Cinema
- இந்தியாவின் பணக்கார நடிகர்.. ரஜினிகாந்த் சொன்ன அந்த நடிகரின் சொத்து மதிப்பு தெரியுமா? அதிர்ந்து போவீங்க..!
இந்தியாவின் பணக்கார நடிகர்.. ரஜினிகாந்த் சொன்ன அந்த நடிகரின் சொத்து மதிப்பு தெரியுமா? அதிர்ந்து போவீங்க..!
கூலி திரைப்படத்தில் சைமன் என்கிற கேரக்டரில் நடித்துள்ள நடிகர் நாகர்ஜுனாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Coolie Movie Villain Nagarjuna Net worth
கோலிவுட்டில் தற்போது திரும்பிய பக்கமெல்லாம் கூலி படத்தைப் பற்றிய பேச்சு தான். ரஜினிகாந்த் நடித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் கடந்த வாரம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் ரஜினிகாந்த் பேசுகையில், நாகர்ஜுனா இப்படத்தில் எப்படி வில்லனாக நடிக்க ஒத்துக் கொண்டார். ஏனெனில் அவரை பணம் கொடுத்து வாங்க முடியாது. இந்தியாவின் பணக்கார நடிகர் அவரு, என அவரைப் பற்றி ஓவர் பில்டப் விட்டு பேசி இருந்தார். அப்படி நாகர்ஜுனாவுக்கு எத்தனை கோடி சொத்து இருக்கிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
நாகர்ஜுனா சொத்து மதிப்பு
நடிகர் நாகர்ஜுனா இந்தியாவின் பணக்கார நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.3310 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு நடிப்பு ஒரு சைடு பிசினஸ் தான். இதுதவிர ஏராளமான தொழில்களை செய்து வருகிறார். இவரின் தந்தை நாகேஸ்வரராவ்வும் மிகப்பெரிய பணக்காரர். நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றும் உள்ளது. அதன் பெயர் அன்னப்பூர்ணா ஸ்டூடியோ. சுமார் 22 ஏக்கரில் அமைந்திருக்கும் அந்த ஸ்டூடியோவின் மதிப்பு மட்டும் சுமார் 200 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இங்கு ஏராளமான படங்களின் படப்பிடிப்பு நடைபெறும்.
பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் நாகர்ஜுனா
நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமாக பிரைவேட் ஜெட்டும் இருக்கிறது. அதன் மதிப்பு ரூ.20 கோடி இருக்குமாம். இதுதவிர கார்கள் மீதும் அதீத பிரியம் கொண்ட அவரிடம், BMW 7 சீரிஸ், Porsche Cayenne, BMW M6 போன்ற சொகுசு கார்களும் உள்ளன. அந்த கார்களின் மதிப்பு சுமார் 6 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் படங்களில் நடிக்க ரூ.20 முதல் ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இத்தனை ஆண்டுகள் ஹீரோவாக நடித்து வந்த நாகர்ஜுனா, கூலி படத்தில் தான் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவர் நடித்துள்ள சைமன் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகர்ஜுனா ஃபேமிலி
நடிகர் நாகர்ஜுனாவின் முதல் மனைவி பெயர் லட்சுமி, இவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் நாக சைதன்யா. லட்சுமியை விவாகரத்து செய்த பின்னர் நடிகை அமலா மீது காதல் வயப்பட்டார் நாகர்ஜுனா. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அகில் என்கிற மகன் இருக்கிறார். நாகர்ஜுனாவின் மகன்கள் இருவருமே சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்கள். இதில் மூத்த மகன் நாக சைதன்யா, முதலில் நடிகை சமந்தாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், கடந்த ஆண்டு நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்தார். இதையடுத்து நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலின் திருமணமும் இந்த ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.