- Home
- Cinema
- 'அரங்கம் அதிரட்டுமே' கூலியால் திருவிழாவாக மாறிய தியேட்டர்கள் - அரங்கம் அதிர அலப்பறை செய்த ரசிகர்கள் - வீடியோ இதோ
'அரங்கம் அதிரட்டுமே' கூலியால் திருவிழாவாக மாறிய தியேட்டர்கள் - அரங்கம் அதிர அலப்பறை செய்த ரசிகர்கள் - வீடியோ இதோ
நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் நள்ளிரவு முதலே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திரையரங்குகளில் மாஸ் காட்டும் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. கலாநிதி மாறனின் சன்பிக்சர்ஸ் நிறுவனம் கூலி படத்தை வெளியிட்டுள்ளது. சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டாக வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் மீதான ஹைப் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
கூலியில் நட்சத்திர பட்டாளம்
அமீர்கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் வழக்கம் போல தனது பாணியில் மாஸாக இசையமைத்துள்ளார். திரைத்துரையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை எட்டிய நிலையில் அதனை கொண்டாடும் வகையில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணைமுதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அரசியல் தலைவர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
படம் எப்படி இருக்கு?
கூலி படத்தின் முதல் பாதி சிறப்பாக இருப்பதாக படத்தை பார்த்த வெளிநாடு வாழ் ரஜினி ரசிகர்கள் தங்கள் கருத்துகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் தலைவர், நாகர்ஜுனா மற்றும் அனிருத் இப்படத்தை தூக்கி நிறுத்தி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Time to celebrate superstar🔥❤️
| Sandhya Bangalore| #coolie#Rajinikanth#sandhya35mm#CooliePowerhousepic.twitter.com/DWTh5PKhk6— Chandruchethu (@Chandruchethu1) August 14, 2025
திரையரங்குகளில் கொண்டாட்டம்
படம் இன்று காலை வெளியிடப்படும் நிலையில் நேற்று இரவே திரையரங்குகளில் குவிந்த ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேள, தாளங்கள் முழங்கவும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Bay area lo vere here ki ilanti celebrations chupiste aayaniki lifetime settlement time settlement ra 💥 #CoolieFDFS#Coolie#Bayarea#California#Rajinikanth𓃵pic.twitter.com/GWvGzP8eLy
— Balu (@BaluChris) August 14, 2025