STR என தன்னையே கூறிக்கொண்டு... மன்மதனாக மாறிய கூல் சுரேஷ்! நடிகையின் தொடையை பிடித்தபடி வெளியான புகைப்படம்!
சமீபத்தில் கூல் சுரேஷ் வெந்து தணிந்தது காடு படத்திற்கு ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்ட போது இவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த, தற்போது கூல் சுரேஷ் வெளியிட்டுள்ள போட்டோ சூட் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில், வில்லன் கதாபாத்திரத்திலும், காமெடி ரோலிலும் நடித்து வருபவர் கூல் சுரேஷ். ஆனால் சூரி, யோகி பாபு, ரோபோ ஷங்கர் போன்ற நடிகர்களின் வருகையால் இவரை போன்ற சிறிய நடிகர்கள் வெளியே தெரியாமலேயே போனார்கள். அந்த வகையில் கூல் சுரேஷுக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் போனது.
திரைப்படங்களில் இவரை பார்க்க முடியவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல் பட்டு வருகிறார் கூல் சுரேஷ். தனக்கென யூடியூப் ஒன்றை நடத்தி வரும் அவர்... அதில் திரைப்பான்களுக்கு சென்று ஸ்பாட்டில் இருந்த படியே விமர்சனம் செய்து அசத்துவார். அதே போல் இவர் ஒரு பிரபலம் என்பதால் இவர் எங்கு சென்றாலும் அங்கு ஒரு கூட்டம் கூடிவிடும்.
மேலும் செய்திகள்: விஜய், அஜித் சம்மதித்தால் இருவரையும் ஒரே படத்தில் இயக்க நான் தயார்..! இயக்குநர் வெங்கட் பிரபு ஓபன் டாக்..!
குறிப்பாக சிம்புவின் ரசிகரான கூல் சுரேஷ்... சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புரொமோஷனுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். மேலும் கூல் சுரேஷ் பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுவதை பார்த்து சிம்பு தான் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் ஒன்றை வழங்கவும் வழிவகை செய்துள்ளார். சிம்பு பட வாய்ப்பு கொடுத்த அதிர்ஷ்டம் போட்டோ ஷூட்டில் சும்மா பொளந்து காட்டுகிறார் கூல் சுரேஷ்.
நேற்று முன்தினம் ஹீரோ லுக்கில் போஸ் கொடுத்த கூல் சுரேஷ்... தற்போது தன்னையே STR அதாவது (Suresh Taking revenge) என கூறி கொண்டு... மன்மதனாக மாறி நடிகையின் தொடை மீது கையை வைத்து கொண்டும், அவரது கால்களை பிடித்தபடியும் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: ஒரு பக்கம் ஐஸ்வர்யா ராய்... இன்னொரு பக்கம் த்ரிஷா.. ஏ.ஆர்.ரஹ்மான் தோளில் சாய்ந்து அமர்களப்படுத்திய போஸ்!