சத்தம் இல்லாமல் வளரும் 'குக் வித் கோமாளி' சிவாங்கி..! புதிய சாதனைக்கு நெகிழ்ச்சியுடன் கூறிய நன்றி!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவாங்கி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நிலையில்... சத்தமே இல்லாமல் செய்த சாதனை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக இருந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஃபைனல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், விரைவில் மூன்றாவது சீசன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் சீசன் சுமாரான வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பிரபலங்களுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவும் துவங்கிவிட்டது.
இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக பெரிய காரணம் என்றால், அது கோமாளிகள் செய்யும், சிறு பிள்ளை தனமான விஷயங்களும், அவர்களது காமெடியான பேச்சும் தான்.
இவர்களுக்கு ஈடு கொடுத்து, இவர்களை அனைத்து தொந்தரவுகளையும் சமாளித்து குக்காக நிகழ்ச்சியில் வந்த ஒவ்வொருவருமே தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான, சிவாங்கிக்கு, இந்த நிகழ்ச்சி மூலம் தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி விட்டது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்து வரும், 'டான்' படத்தில் இவர் நடித்து வரும் நிலையில், இயக்குனர் அருண் ராஜ் காமராஜ் இயக்கத்தில், உதயநிதி நடிகைக்கு உள்ள பாலிவுட் ரீமேக் படத்தில், சிவாங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டும் இன்றி தற்போது சத்தமில்லாமல் அடுத்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். சமீபத்தில் தான் இரண்டு மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருந்த சிவாங்கி, குறைந்த நாட்களில் 3 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். இதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.