'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் செம்ம ட்விஸ்ட்..! வயல் கார்டு சுற்றில் இருந்து ஃபைனலுக்கு சென்ற இருவர்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக, அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி.
முதல் சீசன் சுமாரான வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பிரபலங்களுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவும் துவங்கிவிட்டது.
மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் செமி ஃபைனல் கடந்த வாரம் நடந்த நிலையில், அதில் முதல் ஃபைனலிஸ்ட்டாக... கனி தேர்வு செய்யப்பட்டார்.
அவரை தொடர்ந்து இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக அஸ்வின் மற்றும் மூன்றாவது போட்டியாளராக பாபா பாஸ்கரும் இறுதி போட்டிக்குள் நுழைந்தனர்.
இதை தொடர்ந்து இந்த வாரம், நான்காவது ஃபைனலிஸ்ட்டை தேர்வு செய்வதற்காக, வயல் கார்டு சுற்று நடந்தது. இதில் இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய, மதுரை முத்து, தர்ஷா குப்தா, ஷகிலா, பவித்ரா, ரித்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவர்களில் நான்காவது ஃபைனலிஸ்ட்டாக ஷகிலா தேர்வு செய்ய பட்ட நிலையில், ஐந்தாவதாகவும் ஒரு போட்டியாளரை தேர்வு செய்து செம்ம ட்விஸ்ட் கொடுத்தனர் நடுவர்கள்.
அதன்படி தற்போது, ஐந்தாவது பொதியாளரை தேர்வு செய்ய பவித்ரா மற்றும் ரித்திகா இடையே போட்டி வைக்கப்பட்ட போது... அதில், பவித்ரா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.