- Home
- Cinema
- அன்று கார் கிளீனர்... இன்று பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழ்!
அன்று கார் கிளீனர்... இன்று பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழ்!
Cook With Comali Fame Pugazh Buys Luxury Car: 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் புகழ், லிமிட்டட் எடிஷன் சொகுசு கார் ஒன்றை வாங்கிய தகவலை அறிவித்துள்ளார்.

கார் கிளீனர் வேலை:
கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் கண்டிப்பாக சினிமாவில் நல்ல இடத்தை அடைய முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் புகழ். கடலூரில் பிறந்து வளர்ந்த புகழ், சினிமா வாய்ப்பு தேடி வந்த இடம் தான் சென்னை. எடுத்த எடுப்பில் வாய்ப்பு கிடைக்காததால், சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். கார், லாரி, போன்ற வாகனங்களில் கிளீனராக வேலை செய்து, ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து வரும் பணத்தை கொண்டு வாய்ப்பு தேட துவங்கினார்.
கலக்க போவது யாரு வாய்ப்பு:
அந்த சமயத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் ஆடிஷனில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்த சுற்றில் முன்னேறி... டிவி நிகழ்ச்சியிலும் இவர் முகம் தெரிந்தது. புகழ் கஷ்டப்பட்ட காலங்களில் இவருக்கு பல விதத்தில் உதவியாக இருந்தவர் தான் வடிவேல் பாலாஜி. அந்த நன்றி மறவாமல் தான் தற்போது வரை தன்னால் முடிந்த உதவியை அவருடைய குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் செய்து வருகிறார்.
சினிமா வாய்ப்பை கொடுத்த குக் வித் கோமாளி:
கலக்க போவது யாரு நிகழ்ச்சி இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகளை பெற்று தந்தது. சிக்ஸர் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான புகழ், அதன் பின்னர் தா தா 87, கைதி, காக்டைல், சப்வே, சபாபதி, என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல் விசேஷம், யானை, ஏஜெண்ட் கண்ணாயிரம், டிஎஸ்பி, கடைசி காதல் கதை, அயோத்தி என்று பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
புகழின் ஹீரோ அவதாரம்:
ஹீரோ மெட்டீரியலாகவும் மாறியுள்ள புகழ் ஜூ கீப்பர் என்கிற படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற வில்லை. அடுத்தடுத்து சில படங்களில் ஹீரோவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஹீரோ சப்ஜெட் படங்கள் ஒரு பக்கம் நடித்து வந்தாலும், முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடத்திலும் வந்து கலகலப்பு மூட்டி வருகிறார். சந்தானம் இல்லாத குறையை புகழ் தற்போது நிவர்த்தி செய்வதாகவே பார்க்கப்படுகிறது.
புகழ் வாங்கிய சொகுசு கார்:
கேரியரில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகரத்து வரும் புகழ், லிமிட்டட் எடிஷன் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட வைரலாகி வருகிறது. மஹிந்திரா நிறுவனம் பேட் மேன் ரசிகர்களுக்காக கார் ஒன்றை லன்ச் செய்தது. இந்த கார் 999 கார்கள் மட்டுமே தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.33 லட்சம் விற்பனையாகும் இந்த காரை தற்போது புகழ் தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் சென்று வாங்கி இருக்கிறார். இதுகுறித்த தகவலை இன்ஸ்டாகிராமில் வெளியிட, ரசிகர்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.