'குக் வித் கோமாளி' செஃப் தாமு முதல் முறையாக மனைவி மற்றும் மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம்! கொள்ளை அழகு..!
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் செஃப் தாமு, மற்றும் செஃப் வெங்கடேஷ் பத் ஆகியோருக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். தற்போது செஃப் தாமு முதல் முறையாக தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக, அதிக பார்வையாளர்களை கவர்ந்தது என்றால் அது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் செஃப் தாமு, மற்றும் செஃப் வெங்கடேஷ் பத் ஆகியோருக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். தற்போது செஃப் தாமு முதல் முறையாக தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
'குக் வித் கோமாளி' முதல் சீசனை விட, இரண்டாவது சீசனில்... நடுவர்களை குழந்தைகள் போல் மாறி, ஓவர் குதூகலம் செய்து வந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
குறிப்பாக செஃப் தாமு, செட்டில் உள்ள அனைவருக்குமே அப்பாவாகவே மாறிவிட்டார். இவருடன் புகழ் இணைந்து அடிக்கும் காமெடிகள் வேற லெவல்.
இவரை பற்றி தெரிந்த அளவிற்கு, இவருடைய குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் குறித்தும் வெளியுலகத்திற்கு தெரிவித்தது இல்லை. ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து அவரது குடும்ப புகைப்படத்தை வெளியிட கோரி கேட்டது உண்டு.
இந்நிலையில் முதல் முறையாக... செஃப் தாமு, தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
முதல் முறையாக வெளியாகியுள்ள தாமுவின் குடும்ப புகைப்படத்தை பார்த்து... கொள்ளை அழகு என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.