'குக் வித் கோமாளி' பாபா பாஸ்கர் சந்தோஷத்துக்கே ஆப்பு வச்சிட்டாங்களே? வேதனையோடு வெளியிட்ட தகவல்..!
இந்நிலையில் 'குக் வித் கோமாளி' பாபா பாஸ்கர் மகிழ்ச்சிக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒருவர் செய்த செயலை அவரே வேதனையோடு வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு சமையல் நிகழ்ச்சியை, இந்த அளவிற்கு சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் நடத்த முடியுமா? என பலரையும் ஆச்சர்யப்படுத்தி வரும் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'.
இந்த நிகழ்ச்சி முதல் சீசனை விட, இரண்டாவது சீசன் கூடுதல் கலகலப்பாக சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு இளவட்ட ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.
கவர்ச்சி நடிப்பில் அசரவைத்த ஷகிலா முதல், பல பிரபலங்களையும் ஆட்டிவைத்த பாபா பாஸ்கர் வரை, சமையல் கலையில் அவர்கள் வெளிப்படுத்தி வரும் திறமையை பார்த்து ஒவ்வொரு வாரமும் வியந்து வருகின்றனர் ரசிகர்கள்.
அதைவிட இந்த நிகழ்ச்சியின் கூடுதல் பலமே இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் ரகளை ஒவ்வொருவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்து வருகிறது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது விளையாடி வரும் கனிமொழி அகத்தியன், பவித்ரா லக்ஷ்மி, பாபா பாஸ்கர், ஷகிலா, என பலருக்கும் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சி மூலம் புதிய புதிய படங்களில், குக் முதல் கோமாளி வரை பிஸியாகி உள்ளனர்.
இந்நிலையில் 'குக் வித் கோமாளி' பாபா பாஸ்கர் மகிழ்ச்சிக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒருவர் செய்த செயலை அவரே வேதனையோடு வெளிப்படுத்தியுள்ளார்.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ ஒருவர் தனக்கே தெரியாமல் ஹேக் செய்து விட்டதாகவும், ரசிகர்கள் போடும் கமெண்ட் மூலம் தான் தன்னுடைய நிறை குறைகளை தெரிந்து கொண்டு, மகிழ்ச்சியாக இருந்தேன்.
அது பிடிக்காத ஒருவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹேக் செய்து விட்டார். இருந்தாலும் விரைவில் திரும்பி வருவேன் என்ற உத்வேகத்தோடு பதிவிட்டுள்ளார் இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.