MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோலிவுட் வேண்டாம்... டோலிவுட் நோக்கி படையெடுக்கும் பாலிவுட் ஸ்டார்ஸ் - காரணம் என்ன?

கோலிவுட் வேண்டாம்... டோலிவுட் நோக்கி படையெடுக்கும் பாலிவுட் ஸ்டார்ஸ் - காரணம் என்ன?

கோலிவுட்டை காட்டிலும் டோலிவுட்டில் தான் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர் அதன் பின்னணியை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 19 2024, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bollywood Stars

Bollywood Stars

பான் இந்தியா படங்களின் வருகைக்கு பின் பல்வேறு மொழி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடிப்பது அதிகரித்து வருகிறது. உதாரணத்திற்கு தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் மாபெரும் வசூல் அள்ளிய படங்கள் என்றால் அது விக்ரம், ஜெயிலர், லியோ போன்ற படங்கள் தான். இதன் வெற்றிக்கு பின்னணியிலும் பான் இந்தியா நட்சத்திரங்கள் இருக்கின்றனர். குறிப்பாக விக்ரம் படத்தில் பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற பான் இந்தியா ஸ்டார்ஸ் இருந்ததால் அப்படம் பெரியளவில் வெற்றியடைந்தது.

அதேபோல் ஜெயிலர் படத்தில் மோகன்லால் மற்றும் ஷிவ ராஜ்குமாரின் கேமியோ பெரியளவில் படத்திற்கு பலம் சேர்த்திருந்தது. லியோ படத்திலும் சஞ்சய் தத் நடித்திருந்ததால் அப்படத்திற்கு வட மாநிலங்களிலும் நல்ல ரீச் இருந்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
RRR Movie

RRR Movie

இப்படி பான் இந்தியா படங்களை கோலிவுட் கொடுத்தாலும் அதில் முன்னோடியாக டோலிவுட் இருந்து வருகிறது. பாகுபலி படத்துக்கு பின்னர் தெலுங்கு திரையுலகில் அதிகப்படியான பான் இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன.

குறிப்பாக தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கும் பான் இந்தியா ஸ்டார்கள் முக்கிய காரணாமாக இருந்தார். உதாரணத்திற்கு அப்படத்தில் வெறும் 8 நிமிட காட்சியில் நடித்த அஜய் தேவ்கன் அதற்காக 35 கோடி சம்பளமாக வாங்கினார். அதேபோல் அதில் ஹீரோயினாக அறிமுகமான பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... ஒன்னில்ல ரெண்டில்ல 550 முறை! அதிகம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படம் பற்றிய ஆச்சர்ய தகவல்

35
chiranjeevi salman khan

chiranjeevi salman khan

இப்படி தெலுங்கு திரையுலகம் கோடிகளை வாரி வழங்குவதால் பாலிவுட் நடிகர்கர்களின் பார்வை சமீப காலமாக டோலிவுட் பக்கம் திரும்பி உள்ளது. குறிப்பாக சல்மான் கான், அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், சையிப் அலிகான் என ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் டோலிவுட்டில் வரிசையாக அறிமுகமாகி உள்ளனர். சல்மான் கான் கடந்த ஆண்டு வெளிவந்த காட்ஃபாதர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். சையிப் அலிகான் பிரபாஸுக்கு வில்லனாக ஆதிபுருஷ் படத்தில் நடித்திருந்தார். அக்‌ஷய் குமார் தற்போது உருவாகி வரும் பான் இந்தியா படமான கண்ணப்பாவில் நடித்து வருகிறார்.

45
Janhvi Kapoor

Janhvi Kapoor

நடிகர்கள் மட்டுமின்றி பாலிவுட் நடிகைகளுக்கும் பேவரைட் ஸ்பாட்டாக மாறி இருக்கிறது டோலிவுட். நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தெலுங்கில் முதன்முறையாக ஹீரோயினாக நடித்துள்ளார். அவர் நடித்துள்ள படம் தேவரா. இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஜான்வி. இப்படத்திற்காக அவருக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாரி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேவரா படம் வருகிற செப் 27-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

55
Kiara Advani

Kiara Advani

அதேபோல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்திலும் பாலிவுட் ஹீரோயின் தான் நடித்துள்ளார். நடிகை கியாரா அத்வானி இப்படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். தமிழ் திரையுலகை காட்டிலும் டோலிவுட்டில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஐக்கியமாவதற்கு முக்கிய காரணம் சம்பளம் தான் . டோலிவுட்டில் கோடி கோடியாய் சம்பளம் கிடைப்பதால் தான் அங்கு பாலிவுட் பிரபலங்கள் படையெடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளியே வேண்டாம்னு தூக்கியெறிந்த மணிமேகலை; வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அமிதாப் பச்சன்
பாலிவுட்
சல்மான் கான்
டோலிவுட்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved