- Home
- Cinema
- மீண்டும் ஒரு ‘லவ் டுடே’... ஹீரோவானார் ‘கோமாளி’ இயக்குனர் - முதல் படத்திலேயே 2 ஹீரோயின்! யார்... யார் தெரியுமா?
மீண்டும் ஒரு ‘லவ் டுடே’... ஹீரோவானார் ‘கோமாளி’ இயக்குனர் - முதல் படத்திலேயே 2 ஹீரோயின்! யார்... யார் தெரியுமா?
Love Today : கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கோமாளி. இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த ஒருவர், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி என்னென்ன சிக்கல்களையெல்லாம் சந்திக்கிறார் என்பதை இப்படத்தில் நகைச்சுவையுடன் காட்சிப்படுத்தி இருந்தார் பிரதீப்.
இதையும் படியுங்கள்... முதல் படத்திலேயே இப்படியா... சூப்பர் கண்ணா! - மாதவனின் ராக்கெட்ரி படம் பார்த்து பிரம்மித்துப்போன சூப்பர்ஸ்டார்
இப்படத்தில் ஜெயம் ரவி உடன் யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ராமர், பொன்னம்பலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்துக்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார்.
இதையும் படியுங்கள்...வனிதாவை சேர்த்து கொள்வீர்களா?..ஆடிப்போன அருண்விஜய் !
இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த இயக்குனர் பிரதீப், கடந்த சில மாதங்களுக்கு முன் தான் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடிக்க உள்ளதாக அறிவித்தார். விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயரிக்கிறது.
இதையும் படியுங்கள்...பிரம்மாண்ட வெற்றிவிழா நடத்த உள்ள உதயநிதி... விஜய் முதல் கமல் வரை யார் யாரெல்லாம் கலந்துக்க போறாங்க தெரியுமா?
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ரவீனா ரவி மற்றும் இவானா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்திற்கு லவ் டுடே என பெயரிடப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவெ விஜய் நடிப்பில் லவ் டுடே என ஒரு படம் ரிலீசாகி உள்ளதால், நடிகர் விஜய்யிடமும், அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடமும் அனுமதி பெற்று இப்படத்திற்கு தலைப்பு வைத்ததாக அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.