'விடுதலை' படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகும் யாரும் எதிர்பாரதா பிரபலம்..! வெளியான ஆச்சர்ய தகவல்!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தில் யாரும் எதிர்ப்பாராத பிரபலம் முதல் முறையாக நடிகராக அறிமுகம் ஆக உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
viduthalai shooting spoot
தமிழ் சினிமாவில் தொடர்ந்து, தரமான படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் தேசிய விருது பெற்ற 'அசுரன்' படத்திற்கு பின், தற்போது நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் முதல் முறையாக வெற்றிமாறன் படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார்.
viduthalai shooting spoot
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அடர்ந்த காட்டுப்பகுதியில் தான் எடுக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் முதல் கட்ட படப்பிடிப்பை துவங்கிய படக்குழு, விரைவில் நான்காம் கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக திண்டுக்கல்லில் உள்ள சிறுமலையில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்காக நடிகர் சூரி தன்னுடைய உடலை பல்வேறு உடல் பயிற்சிகள் மூலம் செம்ம ஃபிட்டாக மாற்றி உள்ளார்.
மேலும் செய்திகள்: உடல் எடை கூடிய ஆலியா பட்... பேபி பம்ப் தெரியும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ரன்பீருடன் கொடுத்த லேட்டஸ்ட் போஸ்!
viduthalai shooting spoot
சூரி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி போராளியாக நடித்த வருகிறார். அவ்வப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை சூரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளிட்டு வருகிறார். அப்படி வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டது.
viduthalai shooting spoot
தற்போது வெளியாகி உள்ள தகவலில், பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனன் 'விடுதலை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு ராஜீவ் மேனன் தான் மிகவும் பொருத்தமாக இருப்பார் என எண்ணிய வெற்றிமாறன், அவரை அணுகியதாகவும் படத்தின் கதை மற்றும் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து கேட்ட உடனேயே ராஜீவ் மேனன் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: என்னை நேரில் காண யாரும் வரவேண்டாம்... உடல்நிலை குறித்து கூறி இயக்குனர் பாரதிராஜா வைத்த கோரிக்கை!
எனவே விரைவில் திண்டுக்கல்லில் நடக்க உள்ள படப்பிடிப்பில் ராஜீவ் மேனன் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவாளராக மட்டுமின்றி தமிழில் மின்சார கனவு, கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாள மயம், ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.