"அன்று சத்யராஜ்.. இன்று கார்த்தி" - திருப்பதி லட்டு விவகாரத்தில் டாப் நடிகர்களை கலாய்க்கும் மாறன்!
Blue Sattai Maran : நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் திருப்பதி லட்டு விவகாரத்தில், டாப் தமிழ் நடிகர்களை கலாய்த்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.
Blue Sattai Maran
திருப்பதியில் வழங்கப்படும் லட்டுகளில், நெய் சேர்ப்பதற்கு பதிலாக அதில் விலங்குகளின் கொழுப்பும், மீன் எண்ணெயும் சேர்க்கப்படுகிறது என்று பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. மேலும் அவருடைய குரலுக்கு வலு சேர்க்கும் வகையில், ஆந்திராவின் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்த சூழலில் தான் பிரபல நடிகர் கார்த்தி, தனது "மெய்யழகன்" திரைப்பட ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சில விஷயங்கள், பவன் கல்யாண் வரை சென்று, நடிகர் கார்த்தி, ஆந்திரா துணை முதல்வரின் கோபத்திற்கு ஆளானார்.
சூப்பர் ஸ்டாரின் "வேட்டையன்" படத்தில் செய்யப்படும் பெரிய மாற்றம் - எல்லாம் ட்ரைலர் செஞ்ச லீலை!
Andhra Deputy CM
ஹைதராபாத்தில் நடந்த கார்த்தியின் "மெய்யழகன்" திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வில், தொகுப்பாளர், கார்த்தியை நோக்கி ஒரு கேள்வியை முன் வைத்தார். அதாவது உங்களுக்கு "லட்டு வேண்டுமா?" என்று கேட்க, அதற்கு பதில் அளித்த நடிகர் கார்த்தி "இங்கு லட்டு பத்தி எதுவும் பேசக்கூடாது.. ரொம்பவும் சென்சிடிவான டாபிக் அது" என்று கொஞ்சம் சிரித்துக்கொண்டே கூறியிருந்தார். அவர் பேசிய அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில், அது ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வரை சென்றது.
இந்நிலையில் கார்த்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பவன் கல்யாண் "ஒரு நடிகராக அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால் சனாதன தர்மம் என்று வரும் பொழுது ஒரு விஷயத்தை நாம் பேசுவதற்கு முன் 100 தடவையாவது யோசித்து விட்டு பிறகு பேச வேண்டும்" என்று சற்று காட்டத்துடன் பதில் அளித்தார்.
Actor Karthi
கார்த்தியின் கருத்துக்கு உடனே ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் கோபமாக ரியாக்ட் செய்த நிலையில் சற்றும் தாமதிக்காமல் தன்னுடைய கருத்துக்காக நடிகர் கார்த்தி இன்று மன்னிப்பு கூறியிருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் "பவன் கல்யாண் சார், இந்த விஷயம் எதிர்பாராத விதமாக தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. முதலில் நான் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடாஜலபதி பெருமானின் பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நமது மரபுகளை மதித்து நடப்பவன் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று தன்னுடைய மன்னிப்பை வெளியிட்டு இருந்தார். இப்போது அவருடைய அந்த மன்னிப்பை வேறு சில டாப் தமிழ் நடிகர்களோடு ஒப்பிட்டு, ஒட்டுமொத்தமாக அனைவரையும் கலாய்த்து வருகின்றார் இயக்குனரும், பிரபல திரைப்பட விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன்.
Captain Vijayakanth
கார்த்தி மன்னிப்பு கூறியதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக சில பதிவுகளை ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டு வருகிறார். அதில் "எங்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல எந்த ஒரு விஷயத்தைப் பற்றி கேட்டாலும், எனக்கு அது பற்றி தெரியவே தெரியாது என்று சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள் கார்த்தி" என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் "இதுவே இந்த இடத்தில் கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால், அவர் நிச்சயம் எந்தவிதமான மன்னிப்பும் கேட்டிருக்க மாட்டார். பாகுபலி திரைப்பட ரிலீஸ் சமயத்தில் காவிரி விவகாரத்தில் முதலில் கர்நாடகாவிற்கு எதிராக பேசிய சத்யராஜ், தன்னுடைய பட ரிலீஸுக்காக உடனே மன்னிப்பு கேட்டார். இப்போது ஆந்திரா நடிகர் பவன் கல்யாணிடம் கார்த்தி இந்த லட்டு விவகாரத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறார்" என்று கூறி சில பதிவுகளை அவர் வெளியிட்டு வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும்போது.. 1 மணிநேரம் தேம்பி தேம்பி அழுத ஸ்வர்ணலதா! ஸ்தம்பித்த ஸ்டூடியோ!