தங்கலான்: பிதாமகன் விக்ரமின் உழைப்பிற்கு கிடைத்த தங்க கிரீடம்
சியான் விக்ரமின் அர்ப்பணிப்பான நடிப்பில் உருவான தங்கலான், பழங்குடியின மக்களின் கதையை சொல்லும் ஒரு திரைப்படம். விக்ரமின் உழைப்பு, தன்னை அர்ப்பணித்த விதம் ஆகியவை ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளன. ஐ, சேது, பிதாமகன், தெய்வ மகள் வரிசையில் தங்கலான் இடம்பெறுமா?
Thangalaan Movie
சியான் விக்ரம் நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் தங்கலான். விக்ரமின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த தங்க கிரீடமாக தங்கலான் Thangalaan அமைந்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா ரஞ்சித் இயக்கத்தில் பழங்குடியின மக்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தங்கலான்.
Vikram Thangalaan Movie
பொன்னியின் செல்வன் – 2 படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான படம் தான் தங்கலான் Thangalaan. இந்தப் படத்திற்காக அவரது உழைப்பு, தன்னை அர்ப்பணித்த விதம், அவரது முயற்சி ஆகியவற்றிற்கு கிடைத்த பரிசு தான் ரசிகர்களின் விமர்சனம். படத்தின் சண்டைக்காட்சியின் போது விக்ரமிற்கு விலா எலும்பு முறிந்தது என்று இயக்குநர் பா ரஞ்சித் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.
Chiyaan Vikram Thangalaan
அந்தளவிற்கு தன்னை வருத்தி இந்தப் படத்தில் அவர் நடித்திருக்கிறார். விக்ரமின் நடிப்பிற்கு உதாரணமாக ஐ, சேது, பிதாமகன், தெய்வ மகள் வரிசையில் தங்கலான் படத்தையும் குறிப்பிடலாம். பிதாமகன் தேசிய விருது பெற்று கொடுத்தது என்றால், தங்கலான் ஆஸ்கர் பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Chiyaan Vikram's Thangalaan Hits Worldwide Cinemas
விக்ரம் உடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி ஆகியோர் பலரும் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த மினிக்கி மினிக்கி பாடல் பட்டிதொட்டியெங்கும் ரீல்ஸாக டிரெண்டானது. கிட்டத்தட்ட ரூ.100 முதல் ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் விக்ரம் தனது கடின உழைப்பிற்கு சம்பளமாக ரூ.30 கோடி வரையில் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Thagalaan Public Review
எந்த ஒரு மாஸ் நடிகரும் கோவணம் கட்டுவதற்கும், தலை முடியை பாதியாக குறைப்பதற்கும் தயங்கும் நிலையில் விக்ரம் அதனை ஒரு சவாலாக நேற்று தங்கலானாகாவே படத்தில் வாழ்ந்திருக்கிறார். படத்தில் பாடல் காட்டிகள் குறைவாக இருந்தாலும் விறுவிறுப்புக்கும் ஆக்ஷன் காட்சிக்கும் குறைவில்லை.
Thangalaan Twitter Review
தங்கலான் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்களிடமிருந்தும் நேர்மறையான வரவேற்பு பெற்று வருகிறது. படத்திற்கு விக்ரம் மட்டுமே பலமாகவும், பாலமாகவும் இருக்கிறார். அவரது நடிப்பை பாராட்டதவர் எவரும் இல்லை.
Vikram Thanglaan Movie
தனது பழங்குடியின மக்களுடன் பழங்குடியின தலைவனான தங்கலான் (விக்ரம்), தங்கத்தை தேடும் வேலையில் இறங்குகிறார். அப்போது சூனியக்காரியான ஆரத்தியின் (மாளவிகா மோகனன்) கோபத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதைத் தொடர்ந்து தங்களது முழு பலத்துடன் ஆரத்தியை எதிர்த்து புறப்படுகிறார் தங்கலான். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தங்கலான் படம்.
Chiyaan Vikram Thangalaan
படமும், காட்சியும் கண்ணுக்கு விருந்தளிக்கிறது. இதில், சூனியக்காரியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு முத்திரையை இந்தப் படத்தின் மூலமாக பதித்துள்ளார்.
Thangalaan Movie Reivew
இதுவரையில் பிதாமகன் மட்டுமே விக்ரமுக்கு தேசிய விருது வென்று கொடுத்துள்ளது. ஆனால், அவருக்கு ஆஸ்கர் பெற்று கொடுக்கும் படமாக தங்கலான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சினிமாவிற்கு பெருமை தேடித் தரக் கூடிய ஒரு படமாக தங்கலான் இருக்கும். தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் என்று சினிமா பிரபலங்கள் பலரும் விக்ரமுக்கும், தங்கலான் படம் ஹிட் படமாக அமையவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.