சித்ரா உடலில் இத்தனை இடங்களில் காயம்..! தவறான இடத்தில் அடித்து கொலையா..? தோழியின் பகீர் குற்றச்சாட்டு..!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி, ஸ்டார்ட் மியூசிக் ஷூட்டிங்கில் இருந்து, நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்த போது, குளிக்க செல்வதாக ஹேம்நாத்தை வெளியே அனுப்பிவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை போலீசில் புகார் அளித்த நிலையில், சித்ராவுடன் தங்கியிருந்த அவருடைய கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணைக்கு பின்னர், கைது செய்து 15 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஹேமந்திற்கும் சித்ராவிற்கும் இடையே ஏற்கனவே பதிவு திருமணம் நடந்துள்ளதால், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணையை பல்வேறு கோணங்களில் நடத்தி வருகிறார்.
மேலும் சித்ராவின் தற்கொலை குறித்து, அவரது தோழிகள் தங்களது மனதில் உள்ள சந்தேகங்களை அடுத்தடுத்து வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நடன இயக்குனர், அபிராமி... சித்ரா குறித்து பேசுகையில், அவர் ஆரம்பத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்து வந்தவர், எனவே அவருக்கு தற்கொலை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வர வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் தற்கொலை எண்ணத்தில் இருப்பவர் ஏன் அவரையே அடித்து கொள்ளவேண்டும் என்கிற கேள்வியை முன் வைத்து, அவரது இரு கன்னத்திலும் காயங்கள் இருந்ததாகவும், தவடையில் மிக பெரிய காயம் இருந்ததை நானே பார்த்தேன். அவரது கழுத்தில் தூக்கு மாட்டி கொண்டதற்கான அடையாளம் துளியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
நண்பர்கள் சிலர் அவரது வயிறு, கால், பாதத்தில் பிளர்ந்து இருப்பது போல் காயம் இருந்ததை கண்டதாகவும் தன்னிடம் தெரிவித்தனர்.
எனவே அவரை அடித்து துன்புறுத்தியபோது, தவறான இடத்தில் பட்டு உயிர் போய் இருக்க வாய்ப்புகள் அதிகம் எனவே தான் நினைப்பதாக ஊடகம் ஒன்றிக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.