ஏற்கனவே 3 பேருடன் காதல்... குடிப்பழக்கம்..! சித்ரா குறித்து பகீர் தகவல்களை அடுக்கிய ஹேம்நாத்தின் தந்தை..!
ஹேமந்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சித்ராவின் தற்கொலை பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை புகார் மனுவில் கூறியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவின் வழக்கில் அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேமந்த் ரவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே ஹேமந்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்த புகார் மனுவில் ஹேமந்த்தின் தந்தை கூறியுள்ளதாவது, சித்ராவின் தற்கொலைக்கு அவரது முன்னாள் காதலர்கள் , மற்றும் அவருக்கு நெருக்கமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் மிரட்டல்கள் காரணமாக இருக்கலாம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சித்ராவுக்கு ஏற்கனவே மூன்று பேரை காதலித்துள்ளதாகவும், அதில் ஒரு சில காதல்... திருமணம் வரை சென்று நின்றதாகவும் கூறியுள்ள அவர், சித்ராவுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்தது என்றும், தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவருடன் சித்ரா டேட்டிங் சென்றதாகவும் அப்போது எடுக்கப்பட்ட நெருக்கமான புகைப்படங்களை வைத்து அவர் மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திருவான்மியூரில் உள்ள கோடிக்கணக்கான மதிப்புள்ள வீடு மற்றும் ஆடி கார் வாங்கியதற்கு அவருக்கு தெரிந்த தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உதவி இருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் கேள்வி ஒன்றை வைத்துள்ள ஹேமந்த்தின் தந்தை மீதமுள்ள தொகையை தான் சித்ரா மாதத் தவணையாக செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்
சித்ரா திருமணம் செய்து கொண்டால் ஒரு சில ஆதாரங்களை வெளியிட்டு திருமணத்தை நிறுத்துவதோடு அசிங்கப்படுத்த போவதாக அவருக்கு நெருக்கமான தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிரட்டி இருக்கலாம் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இதுபோன்ற பல்வேறு பிரச்சனை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு சித்ரா உயிர் இழந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள ஹேமந்த்தின் தந்தை ரவி ஷங்கர், சித்ரா தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகள் அழிக்கப்பட்டது ஒருசிலரை காப்பாற்றவே என்றும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சித்ராவின் தொலைபேசி அழைப்புகள் விவரங்களை கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினால் சித்ராவின் தற்கொலைக்கு உண்மையான காரணம் வெளிப்படும் என்றும் சித்ராவின் தற்கொலைக்கு காரணமானவர்களை விரைந்து விசாரித்து கைது செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.