- Home
- Cinema
- Acharya : அட்டர் ஃபிளாப் ஆன ‘ஆர்.ஆர்.ஆர்’ நாயகனின் ஆச்சார்யா.... இதுக்கு பீஸ்ட் எவ்ளவோ பரவால்ல போலயே
Acharya : அட்டர் ஃபிளாப் ஆன ‘ஆர்.ஆர்.ஆர்’ நாயகனின் ஆச்சார்யா.... இதுக்கு பீஸ்ட் எவ்ளவோ பரவால்ல போலயே
Acharya : அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கூட மோசமான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் கல்லா கட்டியது. ஆனால் ஆச்சார்யா படம் அட்டர் ஃபிளாப் ஆகி அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான சீதாரமராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நாயகர்களாக நடித்திருந்தனர். கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் மார்க்கெட்டும் பன்மடங்கு உயர்ந்தது. இதனால் இவர்கள் நடிப்பில் உருவாகும், புதிய படங்களுக்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகி ஒரே மாதத்தில் ராம்சரண் அவரது தந்தை சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்த ஆச்சார்யா திரைப்படம் வெளியானது.
தெலுங்கில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கொரட்டல சிவா இயக்கியிருந்த இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்த காஜல் அகர்வால், கடைசி நேரத்தில் படத்தில் இருந்து தூக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. பிரபல இந்தி நடிகர் சோனு சூட் வில்லனாக நடித்திருந்தார்.
ஆர்.ஆர்.ஆர் நாயகன் நடித்துள்ள படம் என்பதால் இப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவு வந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை எல்லாம் பொய்யாக்கி உள்ளது இப்படம். படம் மிகவும் மோசமாக உள்ளதால் பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கி உள்ளது. முதல் நாளில் மட்டும் 53 கோடி ரூபாய் வசூலித்த இப்படம் அடுத்த இரு தினங்களில் வெறும் 17 கோடி மட்டுமே வசூல் ஈட்டி உள்ளது.
இப்படம் இன்னும் 90 கோடிக்கு மேல் வசூலித்தால் மட்டுமே நஷ்டம் அடையாமல் தப்பிக்க முடியும் என கூறப்படுகிறது. ஆனால் அது சாத்தியமே இல்லையாம். இதன்மூலம் இப்படம் கடும் தோல்வியை சந்தித்துள்ளது. அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கூட மோசமான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் கல்லா கட்டியது. ஆனால் ஆச்சார்யா படம் அட்டர் ஃபிளாப் ஆகி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இதையும் படியுங்கள்... Manju warrier : நடிகை மஞ்சு வாரியரை காணவில்லை... அவர் உயிருக்கு ஆபத்து - பிரபல இயக்குனரின் பதிவால் பரபரப்பு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.