தலையில் வாழைப்பூ... உடல் முழுவதும் வாழை இலையை சுற்றி விஸ்வாசம் பேபி அனிகாவின் அசத்தல் போட்டோ ஷூட்!
தமிழ் சினிமாவில், என்னை அறிந்தால்... படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் தான் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். சோட்டா மும்பை என்பது தான் அனிகா முதன் முதலில் அறிமுகமான திரைப்படம்
அதன் பின்னர் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
அதன் பின்னர் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
அந்த படத்தின் பிற்பாதியில் அஜித்தின் மகளாக தோன்றி, புன்னகையால் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.
என்னை அறிந்தால் படத்தில் அனிகாவிற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஸ்வாசம் படத்தில் நடித்தார்.
இந்த படத்திலும் அஜித் - நயன்தாரா ஜோடிக்கு மகளாக வந்து ரசிகர்களின் கவனம் ஈர்ந்தார்.
அதன்பின்னர் தமிழில் மா என்ற குறும்படத்திலும் நடித்தார். அதிலும் அனிகாவின் நடிப்பு ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தது.
தற்போது 14 வயதே ஆகும் அனிகா சுரேந்தர் மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு விதவிதமாக எடுக்கப்படும் போட்டோக்களில் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பட வாய்ப்பு தேடி வருகிறார்.
அதனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கொண்டையில் தாழம்பூவுக்கு பதில், வாழ பூவை வைத்து கொண்டு, வாழை இலையை உடலில் சுற்றி ஆதிவாசி கெட்அப்பில் புதிய போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
இது மற்றொரு புகைப்படம், இந்த எதிர்பாராத கெட்டப்பில் தோன்றி ரசிகர்களை அசர வைத்துள்ளார்