MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Breaking : சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

Breaking : சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Mar 03 2025, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Sivaji Ganesan : ஜக ஜால கில்லாடி படத்தை தயாரிக்க வாங்கிய 4 கோடி ரூபாயை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

24
Jaga Jaala Killaadi

Jaga Jaala Killaadi

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் தன்னுடைய மனைவி அபிராமியை பங்குதாரர்களாக வைத்து ஈசன் புரொடக்சன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்நிறுவனம் மூலம் ஜக ஜால கில்லாடி என்கிற படத்தை தயாரித்து. அப்படத்தில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்தனர். 

இப்படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த கடனை 30 சதவீதம் வட்டியுடன் திருப்பி கொடுப்பதாக துஷ்யந்த் மற்றும் அவர் மனைவி அபிராமி இருவரும் உறுதி அளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்

இதையும் படியுங்கள்... தேசிய விருது அறிவிக்கப்பட்டும் வாங்க மறுத்த சிவாஜி கணேசன் - காரணம் என்ன?

34
Dushyanth, Ramkumar

Dushyanth, Ramkumar

ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரனை மத்தியஸ்தராக நியமித்து, உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய ரவீந்திரன், கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க ஏதுவாக ஜக ஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டார்.

44
Chennai High court

Chennai High court

அந்த உத்தரவின் பேரில் படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக்கோரியபோது படம் முழுமை அடையவில்லை என தயாரிப்பு தரப்பு கூறிதால் சிவாஜி கணேசனின் வீட்டை ஏலத்தில் விடவும் ஜப்தி செய்யவும் தனபாக்கியம் நிறுவனம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை மார்ச் 5ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... இலங்கையில் கொடிகட்டி பறந்த சிவாஜி.. ஒரே படத்தில் அவரை ஓவர்டேக் செய்த கமல் - எந்த படம் அது?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை உயர் நீதிமன்றம்
சிவாஜி கணேசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved