ஆவணப்பட விவகாரம்; தனுஷை தொடர்ந்து நயன்தாரா உடன் சண்டைக்கு வந்த சந்திரமுகி
நடிகை நயன்தாரா தன்னுடைய ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸில் வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு சந்திரமுகி படக்குழுவால் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Nayanthara
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோ அடங்கிய ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸில் கடந்த நவம்பர் மாதம் ரிலீஸ் செய்தார். அந்த ஆவணப்படத்தை கெளதம் மேனன் இயக்கி இருந்தார். இந்த ஆவணப்படம் கடந்த 2022-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டாலும் அதை இரண்டு ஆண்டுகளாக ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தார் நயன்தாரா. அதற்கு முக்கிய காரணம் தனுஷ் தான், அவர் அந்த ஆவணப்படத்தில் தான் தயாரித்த நானும் ரெளடி தான் பட காட்சிகளையும் பாடல்களையும் பயன்படுத்த அனுமதி கொடுக்கவில்லை.
Nayanthara Documentary
தனுஷின் அனுமதிக்காக 2 ஆண்டுகள் காத்திருந்த நயன், அதன் பின்னர் வேறுவழியின்றி அந்த பாடல்கள் இன்றி ஆவணப்படத்தை வெளியிட்டனர். இருப்பினும் நானும் ரெளடி தான் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோவை அந்த ஆவணப்படத்தில் பயன்படுத்தி இருந்தனர். இதனால் அதை நீக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பிய தனுஷ் தரப்பு, நீக்காவிட்டால் 10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரி இருந்தனர். இதனால் கடுப்பான நயன்தாரா நடிகர் தனுஷை சரமாரியாக சாடி அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படியுங்கள்...புர்ஜ் கலீபா முன்பு கணவர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா! வைரல் போட்டோ!
Nayanthara, Dhanush
இந்த விவகாரத்தில் நயன்தாரா அறிக்கை வெளியிட்டதற்கு ஒரு பக்கம் ஆதரவு கிடைத்தாலும் மறுபக்கம் அவர் தன்னுடைய ஆவணப்படத்தை பப்ளிசிட்டி பண்ணவே இதுபோன்று செய்துள்ளதாக விமர்சனமும் எழுந்தது. இந்த சர்ச்சைகளையெல்லாம் கடந்து நெட்பிளிக்ஸில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியான நிலையில், தற்போது அந்த ஆவணப்படத்துக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை பிரபல சினிமா பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் வெளியிட்டுள்ளார்.
chandramukhi Nayanthara
அது என்னவென்றால், நயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி படத்தின் காட்சிகள் சில இடம்பெற்றிருந்தன. அந்த காட்சிகளை அனுமதியின்றி நயன்தாரா பயன்படுத்தி இருப்பதாக கூறி அந்த படத்தின் உரிமைதாரர் நயன்தாராவுக்கும், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறாராம். அனுமதியின் தங்கள் பட காட்சிகளை பயன்படுத்தியதால் அதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்களாம். இதனால் நயன்தாரா ஆவணப்பட விவகாரம் மீண்டும் பூதகரமாகி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... 2024-ல் நயன்தாராவின் மோதல் முதல் அல்லு அர்ஜுன் கைது வரை; திரையுலகை அதிர வைத்த 7 சர்ச்சைகள்!