Ravinder Chandrasekar:15 ஆண்டுகளுக்கு பிறகு ஓடியதால் வந்த பிரச்சனை – நடக்க முடியாமல் அவதிபட காரணமே இது தானாம்!
பிக்பாஸ் வீட்டில் ரவீந்தர் சந்திரசேகர் நடக்க முடியாமல் அவதிப்பட்டதற்கான காரணத்தை கேப்டன் தர்ஷிகா விளக்கியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று ஓடியதால் அவருக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது.
Fatman Injured, Bigg Boss Tamil Season 8
பிக்பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக இடம் பெற்றுள்ள ரவீந்தர் சந்திரசேகர் நடக்க முடியாமல் அவதிப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஆனால், எதற்காக அவர் நடக்க முடியாமல் அவதிப்பட்டார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் தற்போது அதற்கான காரணம் குறித்து பிக்பாஸ் கேப்டன் தர்ஷிகா வெளியிட்டுள்ளார்.
அதாவது ரவீந்தர் சந்திரசேகர் நடக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில் தூங்கிக் கொண்டிருந்த தன்னை எழுப்பியதாகவும் அதன் பிறகு ஆண்களே பார்த்துக் கொண்டதாகவும் குறிப்பிட்ட தர்ஷ்கா கன்பெஷன் ரூமுக்கு அழைத்து சென்றார்கள். இதையடுத்து மருத்துவ உதவி அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றார். அதன் பிறகு பேசிய அவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக திடீரென்று ஓடியதால அதிக உடல் எடை காரணமாக அவருக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது.
Fatman Injured
இது எல்லோருக்கும் பொதுவான ஒன்று தான். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் ஓட கூடாது. மாறாக, தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரே நாளில் உடல் எடையை குறைக்கிறேன் என்ற பெயரில் எடுத்த முதல் நாளே ஓடினால் இப்படி தான் சம்பவங்கள் நடக்கும் என்பதற்கு ரவீந்தர் தான் உதாரணம். இது குறை கூறுவதற்கான பதிவு அல்ல. உடல் பயிற்சியும், உடல் எடையும் எந்த அளவிற்கு முக்கியம் என்பதற்கான பதிவு.
ஆகையால், ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் கூடுமானவரையில் உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், நாள்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கேப்டனை தேர்வு செய்வதற்காக நேற்று நடைபெற்ற போட்டியில் எதிரெதிர் திசையில் சேர்கள் போடப்பட்டு ஆண்களும், பெண்களும் எதிரெதிர் திசையில் ஓட வேண்டும்.
Ravinder Chandrasekar Injured, Fatman
கடைசி வரையில் ஓடி யாரு சேரில் உட்கார்கிறார்களோ அவர் தான் இந்த வாரத்திற்கான கேப்டன். சேரில் இடம் பிடிக்க முடியாதவர்கள் வெளியேற்றப்படுவார்கள். அப்படி நடந்த போட்டியில் ரவீந்திரால் ஓட முடியவில்லை. இதனால், அவர் தோற்று வெளியேறினார். மேலும், மற்றவர்கள் யாரும் ஜெயித்து விட கூடாது என்பதற்காக தடுக்கவும் செய்தார். இறுதியாக தர்ஷிகா இந்த வாரத்திற்கான கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கான பொறுப்புகள் என்னென்ன என்பது குறித்து பிக்பாஸ் இதுவரையில் அறிவிக்கவில்லை.
Ravinder Chandrasekar Injured
எனினும் உடல்நிலை பாதிக்கப்பட்ட ரவீந்தர் சந்திரசேகரை ஏன் பிக்பாஸ் வெளியில் அனுப்பவில்லை என்று கேட்டால் அவரை வைத்து டிஆர்பியை எகிற வைக்க பிக்பாஸ் திட்டமிட்டுள்ளார். ஆதலால், அவரை வெளியேற்றவில்லை. மேலும், இன்னும் பல சிறப்பான சம்பவங்கள் அவர் மூலமாக நடக்க வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.