ஜன நாயகன் படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்த புஸ்ஸி ஆனந்த்? என்ன ரோல் தெரியுமா?
Bussy Anand Act With Thalapathy Vijay in Jana Nayagan : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தின் புஸ்ஸி ஆனந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

ஜன நாயகன் படத்தில் புஸ்ஸி ஆனந்த்
Bussy Anand Act With Thalapathy Vijay in Jana Nayagan : இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ஜன நாயகன். விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கெளதம் மேனன், மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை கேவிஎன் புரெடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. வருகிற 2026-ம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும்.
ஜன நாயகன் படத்தில் நடித்த புஸ்ஸி ஆனந்த்
ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்த பின்னர் சினிமாவை விட்டு விலக உள்ளதாக அறிவித்துள்ள விஜய், முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள விஜய், வருகிற 2026-ம் ஆண்டு அக்கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக களமிறங்க உள்ளார். மேலும் மதுரை, மேலூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிஅ தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ள விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். முதற்கட்டமாக 100 ஊர்களுக்கு செல்ல உள்ள அவர், தன்னுடைய பயணத்தை தஞ்சாவூரில் இருந்து தொடங்க திட்டமிட்டு இருக்கிறாராம்.
தளபதி விஜய், புஸ்ஸி ஆனந்த்
நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் பயணத்திற்காக சினிமாவை விட்டு விலக உள்ளதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த முடிவு சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பாக தான் கருதப்படுகிறது. ஏனெனில் தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவில் அதிக வருவாய் ஈட்டித் தரும் ஹீரோ என்றால் அது விஜய் தான். அவர் படம் சுமாராக இருந்தாலும் அதற்கு குறைந்தது பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி வசூல் கிடைத்துவிடும். அதனால் அவரை நம்பி பல கோடிகளை கொட்ட தயாரிப்பாளர் வரிசையில் நின்றாலும், விஜய்யின் முடிவு பலருக்கும் பேரதிர்ச்சியாகவே உள்ளது.
விஜய் - ஜன நாயகன்
அதுமட்டுமின்றி தன்னுடைய கெரியரின் உச்சத்தில் இருக்கும் விஜய், தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார். அவருடைய கடைசி படத்திற்காக அவருக்கு ரூ.275 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதுவரை எந்த ஒரு இந்திய நடிகரும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியதில்லை. ரஜினி, ஷாருக்கான், அமீர்கான் போன்ற நடிகர்கள் எல்லாம் லாபத்தில் பங்கு கேட்பார்கள் ஆனால் தனக்கு அதில் ஒரு சதவீதம் கூட வேண்டாம் எனக்கூறி 275 கோடி சம்பளம் பெற்றிருக்கிறாராம் விஜய்.
ஜன நாயகன் ரிலீஸ் தேதி
ஜன நாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் அப்படத்திற்கு பான் இந்தியா அளவில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அது அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸிலும் எதிரொலிக்கிறது. அதன்படி ரிலீசுக்கு முன்பே அப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் பெரும் தொகைக்கு விற்பனை ஆகி உள்ளன. அதன்படி ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.121 கோடிக்கும், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி நிறுவனம் ரூ.55 கோடிக்கும் கைப்பற்றி இருக்கின்றன.
ஜன நாயகன்
இதுதவிர ஆடியோ உரிமம், திரையரங்க உரிமம், ஓவர்சீஸ் உரிமம் ஆகியவைக்கும் பெரும் டிமாண்ட் உள்ளதால், இப்படம் ரிலீசுக்கு முன்பே பட்ஜெட்டை விட அதிகம் வசூலித்துவிடும் என கூறப்படுகிறது. இதனால் ரிலீசுக்கு முன்னரே பிளாக்பஸ்டர் ஆன படமாக ஜன நாயகன் கருதப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் தவெக பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் முக்கிய ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதுவும், அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம். எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.