மருத்துவ சீட்டு வாங்கித்தருவதாக 1.5 கோடி மோசடி..! சித்ராவின் கணவர் ஹேம்நாத் அதிரடி கைது..!
First Published Jan 5, 2021, 2:29 PM IST
மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத், மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளினியுமான சித்ரா கடந்த மாதம் 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தற்கொலை செய்து கொண்ட போது, அவருடன் அவரது காதல் கணவர் ஹேம்நாத் மட்டுமே உடன் இருந்தார். எனவே அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக ஹேம்நாத் பதிலளித்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?