valimai 2 : அடக்கடவுளே... AK 61 இப்ப இல்லையா? வலிமை 2-வுக்கு தயாராகும் போனி கபூர்?...
valimai 2 : போனி கபூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் வலிமை 2 பற்றி கூறியிருப்பது AK 61துவங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தலாம் என ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது...

valimai
முதல் படத்திலேயே முத்திரை பதித்த எச்.வினோத், அடுத்ததாக கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கினார். இப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத்தந்தது.
valimai
நேர்கொண்ட பார்வை ஒரு ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுத்து வெற்றி வாகை சூடினார் வினோத். இப்படத்தில் வினோத்தின் திறமையை பார்த்து வியந்துபோன அஜித், தனது அடுத்த படமான ‘வலிமை’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்தார்.
valimai
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் வலிமை திரைப்படம், பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக இருந்தது. கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
valimai
இதனிடையே, அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளதாகவும், போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான கதாபாத்திர தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்திய தகவல் படி, மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் மோகன்லால், ‘ஏ.கே.61’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
AK61 update
சமீபத்தில் நடிகர் மோகன்லால், தயாரிப்பாளர் போனிகபூரை மும்பையில் சந்தித்தார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. இந்நிலையில் அஜித்தின் 61 வது படத்தில போலீஸ் கமிஷ்னராக நடிக்க மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா ஆகியோரிடம் படக்குழு பேசியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது..
AK61 update
இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் AK61 முன் தயாரிப்பு லுக்கை ஷேர் செய்துள்ளார்..அதில் நீண்ட தாடியும் சால்ட் அண்ட் பேப்பர் ஸ்டாலுமாய் மாஸ் லுக்காக உள்ளதென ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.. இதன் மூலம் இந்த முறை பில்லா ரேஞ்சுக்கு ட்ரீட் இருக்குமென அஜித் பேன்ஸ் குதுகளத்தில் உள்ளனர்..
AK61 update
இதற்கிடையில் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்துவதற்காக ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார் தயாரிப்பாளர் போனி கபூர். வலிமை படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரமும் கோடிகளை குவித்து வருகிறது. பலரிடமும் இந்த படம் பாராட்டையும் பெற்றுள்ளது.
AK61 update
இந்நிலையில் சமீபத்தில் வலிமை படம் பற்றி டிவி சேனல் ஒன்றிற்கு போனி கபூர் பேட்டி அளித்தார். அதில் வலிமை படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் விருப்பப்பட்டால் கண்டிப்பாக வலிமை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என்றார். போனி கபூரே இப்படி சொல்லி விட்டதால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போனி கபூரின் இந்த கருத்து..முதலில் AK 61 முதலில் துவங்குமா அல்லது வலிமை 2 துவங்குமா என்கிற சந்தேகத்தை கிளப்பியுள்ளது...