ஸ்ரீ வள்ளி பாடலில்... அல்லு அர்ஜுன் டான்ஸ் பின்னணியில் இப்படி ஒரு சீக்ரெட்டா? அமிதாப்பச்சன் பகிர்ந்த ரகசியம்!
'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றான, ஸ்ரீவள்ளி பாடல் பலரையும் கவர்ந்தது. இந்த பாடலில் அல்லு அர்ஜுனன் டான்ஸ் பின்னணிகள் உள்ள சீக்ரெட் ஒன்றை பகிர்ந்துள்ளார் பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்.
பிரபல இயக்குனர், சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரெயிஸ்' இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான நிலையில், இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், வசூல் ரீதியாக உலகம் முழுவதும் சுமார் சுமார் 350 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
செம்மரக்கடத்தல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தின், இரண்டாம் பாகம் 'புஷ்பா தி ரூல்' என்கிற பெயரில் உருவாகி வருகிறது.
மேலும் செய்திகள்: 'கன்னத்தில் முத்தமிட்டால்' சீரியலில் இருந்து விலகியது ஏன்? பகீர் காரணங்களால்... பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!
'புஷ்பா' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வேறு லெவலுக்கு பிரபலமானது. குறிப்பாக ரஷ்மிகா மந்தனா ஆடிய சாமி பாடல், சமந்தா ஆடிய ஓ சொல்றியா மாமா பாடல், மற்றும் அல்லு அர்ஜுன் தன்னுடைய வித்யாசமான நடன திறமையை வெளிப்படுத்திய ஸ்ரீவள்ளி பாடல் ஆகியவை.
தற்போது 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன் டான்ஸ் ஆடிய ஸ்ரீ வள்ளி பாடலுக்குப் பின்னால் உள்ள சீக்ரெட் ஒன்றை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட குரோர்பதி நிகழ்ச்சியில் இந்த பாடல் குறித்த சீக்ரெட்டை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: எல்லை மீறிய கவர்ச்சி... பேன்ட் போடாமல் ஷர்ட் மட்டும் அணிந்து... பப்பி ஷேமாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!
இது குறித்து அவர் கூறுகையில், ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த போது... அல்லு அர்ஜுன் நடனமாடிய ஸ்ரீ வள்ளி பாடலில் செருப்பு திடீரென கழண்டு விழுவது போல் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த காட்சி தற்செயலாக நடந்ததா? அல்லது நடன அமைப்பா என அல்லு அர்ஜுனிடம் கேட்டுள்ளார்.
அப்போது இதற்கு பதில் அளித்த அல்லு அர்ஜுன் அது தற்செயலாக நடந்தது என்றும், பின்னர் அதுவே நடன அசைவாக மாறிவிட்டதாகவும் கூறியுள்ளது, அவரது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: பாவனி - அமீரை தொடர்ந்து மாலையும் கழுத்துமாக... திருமண கோலத்தில் கண் கலங்கிய தாமரை! வைரலாகும் போட்டோஸ்..!