27 வயசுதான்... 65 கோடி வீடு... 1,000 கோடி சொத்து... மகா ராணி போல வாழும் பாலிவுட் அழகி யார் தெரியுமா?
இந்த ஹீரோயினுக்கு வயது 27 தான்.. ஆனால் இவரது சொத்து மதிப்பு ஆயிரம் கோடியை எட்டுகிறது. இவ்வளவு செல்வச் செழிப்புடன் சொகுசான வாழ்க்கை வாழும் நடிகை யார் தெரியுமா..?
Janhvi Kapoor Net Worth
இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி, இப்போது ஸ்டார் ஹீரோயின். சினிமா குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் தனது நடிப்பால் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களுடன் மகாராணி வாழ்க்கையை அனுபவித்து வரும் இந்த இளம் கதாநாயகி யார்?
Janhvi Kapoor Properties
அந்த குயின் வேறு யாருமல்ல, ஜான்வி கபூர் தான். ஆம், மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள்தான் ஜான்வி கபூர். 2018 இல் தனது தாயார் இறந்த பிறகு சினிமா துறையில் நுழைந்தார். தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். பல படங்களில் நடித்துவிட்டார். சமீபத்தில் மிஸ்டர் அண்ட் மிசஸ் மஹி படத்தில் நடித்துள்ளார்.
Janhvi Kapoor Assets
27 வயதாகும் ஜான்வி கபூர் சொகுசு கார்கள் மற்றும் சொகுசு பங்களாவுடன் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஜான்வி கபூரிடம் இருக்கும் விலையுயர்ந்த பொருட்கள் பற்றி தெரிந்தால் அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியாது. மும்பை பாந்த்ராவில் ஜான்வி கபூர் ரூ.65 கோடி மதிப்பிலான ஆடம்பர வீடு வைத்துள்ளார். 8,669 சதுர அடி பரப்பளவில் பரவியுள்ள இந்த பங்களாவில் நீச்சல் குளம் உட்பட பல ஆடம்பர வசதிகள் உள்ளன.
Janhvi Kapoor Bangalow
ஜான்வியின் குடும்பத்துக்கு சென்னையில் மற்றொரு ஆடம்பர மாளிகையும் உள்ளது. 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாளிகை கடலைப் பார்த்து ரசிக்கும் வகையில் கடற்கரையை நோக்கி அமைந்துள்ளது. ஸ்ரீதேவி வாங்கிய இந்த வீடு இப்போது பல நூறு கோடி மதிப்புள்ளது.
Janvi Kapoors Chennai House
சென்னையில் இருக்கும் இந்த கடற்கரை பங்களாவில் தோட்டம், நீச்சல் குளம், நீரூற்று மற்றும் மரத்தால் செய்யப்பட்ட அரிய கலைப் பொருட்கள் முதலியவை உள்ளன. இந்த வீடு தற்போது ஜான்வி கபூரின் பராமரிப்பில் இருப்பதாகத் தெரிகிறது.
Janhvi Kapoor Mercedes Maybach S560
பாலிவுட்டில் Mercedes Maybach S560 கார் வைத்திருக்கும் சிலரில் ஜான்வி கபூரும் ஒருவர். இந்திய சந்தையில் சுமார் 1.94 கோடி விலையுள்ள இந்த சொகுசு கார், மசாஜர், மினி ஃப்ரிட்ஜ், பனோரமிக் சன்ரூஃப் உள்பட பல அற்புதமான அம்சங்களைக் கொண்டது.
Janhvi Kapoor BMW X5
95 லட்சம் மதிப்புள்ள BMW X5 காரும் ஜான்வியிடம் உள்ளது. TwinPower Turbo V8 இன்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த சொகுசு கார் அதிகபட்சமாக 261 bhp பவரையும், 620 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரை வெறும் 6.5 வினாடிகளில் 0 - 100 kmph வேகத்தில் இயக்க முடியும்.
Janhvi Kapoor Mercedes
பிஎம்டபிள்யூ, மெர்சிடெஸ் தவிர் ஜான்வி கபூரிடம் ரூ. 2.7 கோடி மதிப்புள்ள Lexus LX 570, ரூ. 1.62 கோடி மதிப்புள்ள Mercedes-Benz S-Class மற்றும் சுமார் ரூ. 67 லட்சம் மதிப்புள்ள Mercedes GLE 250d ஆகிய சொகுசு கார்களும் இருக்கின்றன.