நம்பர் இருந்தும் பேச பயமா இருக்கு... சாய் பல்லவி மீது ஒருதலைக் காதல் - விவாகரத்தான நடிகர் ஓபன் டாக்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி, மீது தனக்கு கிரஷ் இருப்பதாக விவாகரத்தான நடிகர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் சாய் பல்லவி. இவர் கடந்த 2015- ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் படம் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே சாய் பல்லவி இளசுகளின் கிரஷ் லிஸ்ட்டில் இணைந்து விட்டார். அந்த அளவுக்கு பிரேமம் படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருந்தது.
பிரேமம் திரைப்படம் ரிலீஸாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இன்றும் அப்படம் பார்த்தால் சாய் பல்லவியின் நடிப்பை திரும்ப திரும்ப பார்க்க தூண்டும், அந்த அளவுக்கு யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சாய் பல்லவி. பிரேமம் படத்திற்கு பின் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடிக்கத் தொடங்கிய சாய் பல்லவி தற்போது தென்னிந்திய திரையுலகின் டாப் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
நடிகை சாய் பல்லவி கைவசம் தற்போது சிவகார்த்திகேயனின் எஸ்.கே.21 திரைப்படம் உள்ளது. ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம் முதன்முறையாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி.
இதையும் படியுங்கள்... மினி கோடம்பாக்கமாக மாறிய அகமதாபாத் ஸ்டேடியம்... ஐபிஎல் பைனல்ஸை படையெடுத்து வந்து பார்த்த கோலிவுட் பிரபலங்கள்
இப்படி பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் சாய் பல்லவி மீது தனக்கு கிரஷ் இருப்பதாக பாலிவுட் நடிகர் ஒருவர் சொல்லி இருப்பது பேசு பொருள் ஆகி உள்ளது. பாலிவுட்டில் பதாய் ஹோ, கமாண்டோ, ப்ளர், ஷைத்தான் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் குல்ஷன் தேவய்யா. திருமணமாகி விவகாரத்தான இவர், நடிகை சாய் பல்லவி மீது தனக்கு நீண்ட நாட்களாகவே கிரஷ் இருப்பதாகவும், அவர் தான் தனக்கு மிகவும் பிடித்த நடிகை என்றும் கூறி இருக்கிறார்.
மேலும், சாய் பல்லவியின் மொபைல் எண் தன்னிடம் இருக்கிறது என்று கூறி உள்ள அவர், ஆனால் அவருடன் பேச பயமாக இருப்பதாக கூறி உள்ளார். விரைவில் அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என விருப்பப்படுவதாகவும் குல்ஷன் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் இது கிரஷ் இல்ல ஒரு தலைக்காதல் என கமெண்ட் செய்து வருகின்றனர். குல்ஷனின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... இது தனுஷா இல்ல பாபா ராம் தேவா? நீண்ட முடி, தாடியோடு ரசிகர்களை கன்பியூஸ் செய்த தனுஷ்! வைரலாகும் வீடியோ...